districts

சென்னையில் இந்தாண்டு வெள்ள பாதிப்பு இருக்காது

சென்னை,அக்.16-  சென்னையில் இந்தாண்டு வெள்ள பாதிப்பு இருக்காது என அமைச்சர் துரை முருகன் கூறியுள்ளார். தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இன்னும் சில நாட்களில் தொடங்க உள்ளது. கடந்த பல ஆண்டுகளாகவே வடகிழக்கு பருவமழை காலங்களில் சென்னை தத்தளிக்கிறது. கடந்த 2015-ம் ஆண்டு புறநகர் பகுதிகளில் வெள்ளத்தில் மூழ்கின. இதனால் பல்லாயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டனர். இதனால் மழைக்கு முன்பாகவே அனைத்து பணிகளையும் முடிக்கும் வகையில் தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகின்றது. இந்த நிலையில் சென்னையில் நடைபெற்று வரும் மழைக்கால வெள்ள தடுப்பு பணிகளை அமைச்சர் துரைமுருகன் ஆய்வு செய்தார். இதனை தொடர்ந்து அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, சென்னையில் ஏறக்குறைய 95விழுக்காடு  மழை நீர் வடிகால் பணிகள் நிறைவடைந்துள்ளது. இந்தாண்டு சென்னையில் வெள்ள பாதிப்பு இருக்காது என்று தெரிவித்தார்.