சமூக விரோத செயல்களை தடுக்க மக்கள் கோரிக்கை
செங்கல்படடு, ஜுலை 21- செங்கல்பட்டு ரயில்வே மேம்பாலத்திற்கு கீழ் உள்ள காலி இடம் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறிவருவதால் அந்த இடத்தில் பூங்கா அமைக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். செங்கல்பட்டு மாவட்டம் காஞ்சிபுரம் மாவட்டத்திலிருந்து பரிக்கப்பட்டு தனி மாவட்டமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக செயல்படுகிறது. மாவட்டத்டதின் தலை நகராக செயல்பட்டுவரும் செங்கல்பட்டு நக ராட்சியில் மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில் நகரப் பகுதியல் உள்ள ஏராளமான பிரச்சனைகளை மாவட்ட நிர்வா கம் உடனடியாக சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்ககை விடுத்துள்ளனர். இதன் ஒருபகுதியாக நகரின் மையப் பகுதி யில் ஜிஎஸ்டி சாலையிலிருற்து கல்பாக்கம், மாமல்லபுரம், திருக்கழுக்குன்றம், திருப் போருர் கிழக்கு கடற்கரை சாலை ஆகிய பகுதிக்குச் செல்லும் சலையின் குறுக்கே ரயில்வே மேம்பாலம் ராட்டிணங்கிணறு பகுதி யில் அமைந்துள்ளது. இந்த பாலத்தின் கீழ் உள்ள பகுதிக்கு அரு காமமையில் அரசு மதுபானக் கடை உள்ளது.
இங்கு மது வாங்குபவர்கள் இந்த பாலத்தின் அடியில் உள்ள காலி இடத்தில் அமர்ந்து மது குடிப்பதால் அந்த வழியாக பொதுமக்கள் செல்ல அச்சமடைகின்றனர். பாலத்தின் இரு புறங்களிலும் உள்ள சர்வீஸ் சாலையிலும் அமர்ந்து மது குடிப்பதால் அந்த வழியாக செல்வதையே பொதுமக்கள் தவிர்த்து வரு கின்றனர். இந்த சர்வீஸ் சாலைகள் செங்கல்படடு அண்ணா நகர் பகுதிக்குச் செல்லும் பிரதான சாலை என்பதால் மேம்பாலத்திற்கு அடியில் உள்ள இடத்தை நகராட்சி நிர்வாகம் பூங்கா வாக மாற்றி பராமரிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ள னர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகை யில், ராட்டிணங் கிணறு பகுதியில் செயல் பட்டு வரும் அரசு மதுபானக் கடையால் அங்கு காலை மாலை நேரங்களில் கடும் போக்கு வரத்து நெரிசல் ஏற்படுகின்றது.
இந்த கடை யில் மது வாங்குவோர் மேம்பலத்தின் இரண்டு பக்கத்திலும் உள்ள சர்வீஸ் சாலைகளில் அமர்ந்து மது அருந்துவதுடன் பாலத்தின் கீழ் உள்ள காலி இடத்தில் மது அருந்துவதுடன் பல்வேறு சமுக விரோத செயல்களிலும் ஈடு படுகின்றனர். இதனால் அந்த பகுதிக்கு செல்லவே பொதுமக்கள் அஞ்சுகின்றனர். எனவே நகராட்சி நிர்வாகம் மேம் பாலத்தின் அடியில் காலியாக உள்ள இடத் தில் பூங்கா அமைத்து பராமரிக்க வேண்டும். மேலும் ராட்டிணங்கிணறு பகுதியில் உள்ள அரசு மதுபானக் கடையை அப்புறப்படுத்த வேண்டும். காவல் துறையினர் அந்த பகுதி யில் ரோந்து பணியை மேற்கொள்ள வேண் டும் என்றனர்.