கடலூர், ஜூன் 5- கடலூர் மாவட்டத்தில் தினசரி தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை சரிபாதியாக குறைந்துள்ளதாக வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார். மாவட்டத்தில் உள்ள தனியார் நிறுவனங்கள், அரசு மருத்துவமனைகளின் பயன்பாட்டுக்காக 113 ஆக்சிஜன் செறிவூட்டிகளை வழங்கியுள்ளது. இவை கடலூர் அரசு மருத்துவமனை மற்றும் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் பயன்பாட்டுக்காக வழங்கப்ப டும். மேலும் அரசு எடுத்த தீவிர தடுப்பு நடவடிக்கையின் காரண மாக கடலூர் மாவட்டத்தில் தினசரி சராசரி பாதிப்பு 800ல் இருந்து 400ஆக குறைந்துள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கையில் அரசு எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் பொதுமக்களும் முழு ஒத்து ழைப்பு அளிக்க வேண்டும். சளி, காய்ச்சலால் பாதிக்கப்பட்ட வர்கள் சுயமாக மருந்தகங்களுக்கு சென்று மருந்து வாங்கி சாப்பிடக் கூடாது.
சளி, காய்ச்சல் அறிகுறி உள்ளவர்கள் ஆரம்பத்திலேயே அருகில் உள்ள மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற வேண்டும். மருத்துவரின் ஆலோசனைப்படி நடந்தால் மட்டுமே கொரோனா தொற்றை முழுமையாக கட்டுப் படுத்த முடியும். ஆரம்ப நிலையிலேயே கொரோனாவை கண்டறிந்தால் அதை எளிதில் குணப்படுத்தலாம். ஆனால் இன்று பலர் தொற்று முற்றிய நிலையிலேயே மருத்துவமனைக்கு வருகின்றனர். அதனால்தான் மாவட்டத்தில் உயிரிழப்பு அதிகளவில் உள்ளது. காய்ச்சல், சளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மருந்த கங்களில் மருந்து வழங்குவது கண்டறியப்பட்டால் சம்பந்தப் பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படுவதுடன், அந்த மருந்தகங்கள் அனைத்தும் மூடப்படும். ஜூன் 12ஆம் தேதி மேட்டூர் அணை திறக்கப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார்.
இது சம்பந்தமாக நீர்வளத்துறை அமைச்சருடன், நான் தஞ்சாவூர் சென்று அங்குள்ள விவசாயி களின் கருத்துக்களை கேட்டறிந்துள்ளோம். அதன் அடிப்படை யில் விவசாயிகள் அளித்த அனைத்து கோரிக்கைகளும் நிறை வேற்றப்படும். மேலும் டெல்டா பகுதியில் உள்ள நீர்நிலைகளை தூர்வார ரூ.68 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதனடிப்படை யில் நீர்நிலைகள் அனைத்தும் தூர்வாரப்படும். இந்த பணி யில் மூத்த கண்காணிப்பு அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். இதன் மூலம் தண்ணீர் திறக்கும் போது, சில நாட்களிலேயே கடை மடை பகுதிக்கு சென்று விடும் வகையில் தூர்வாரும் பணிகள் அனைத்தும் முடுக்கி விடப்பட்டுள்ளது. இது தவிர வேளாண் துறை மூலம் அந்த பகுதி மக்களுக்கு உரம், நெல் விதைகள் உள்ளிட்டவை தட்டுப்பாடின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் கூறினார்.