திட்டக்குடி, பிப். 18- திட்டக்குடி அருகே போத்திரமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி பிரபு. இவருக்கு சொந்தமான 2 ஏக்கர் கரும்பு தோட்டம் உள்ளது. இந்நிலையில் வியாழக்கிழமை இரவு அங்கு திடீர் தீ விபத்து ஏற்பட்டது. சிறிது நேரத்தில் நெருப்பு கொளுந்துவிட்டு எரிந்தது. இதனால் அந்த பகுதி முழுவதும் புகை மண்டலமாகக் காட்சியளித்தது. இதுகுறித்து விவசாயி கள் திட்டக்குடி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். இதனால் அதிகளவில் தீ பரவாமல் தடுக்கப்பட்டது. இதுகுறித்து திட்டக்குடி காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.