விழுப்புரம், மே 2- குவாரி குட்டையில் மூழ்கி இறந்தவர்க ளுக்கு அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் விழுப்புரம் மாவட்டக்குழு வலி யுறுத்தியுள்ளது. தென்களவாய் கிராமத்தைச் சேர்ந்த கார் ஓட்டுநர் சுவாமிநாதன். இவரது மனைவி விஜயஸ்ரீ. இவர்களது மகள்கள் வினோதினி (16), ஷாலினி (14). மகன் கிருஷ்ணன் (8) ஆகிய மூவரும் திண்டி வனத்திலுள்ள தனியார் பள்ளியில் படித்து வந்தனர். பள்ளி கோடை விடுமுறை காரணமாக குழந்தைகள் மூவரும் விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் வட்டத்திற்குட்பட்ட பெருமுக்கல் கிராமத்தில் வசிக்கும் தாத்தா பூங்காவனம் வீட்டிற்கு சென்றனர். கடந்த புதன்கிழமை பிற்பகலில் அங்கு உள்ள பயன்படாத அரசு கல்குவாரி குட்டையில் துணிகளை துவைப்பதற்காக பூங்காவனத்தின் மனைவி புஷ்பா சென்றார். அவருடன் பேரன், பேத்திகளும் சென்றனர். அப்போது பேரப்பிள்ளைகள் 3 பேரும் அங்கு குவாரியில் இறங்கி குளித்துக் கொண்டிருந்தனர். அவர்கள் குட்டையின் ஆழமான பகுதிக்குச் சென்றதால் ஒருவர் பின் ஒருவராக மூவரும் நீரில் மூழ்கி இறந்த னர். அவர்களைக் காப்பாற்ற முயன்ற புஷ்பாவும் நீரில் மூழ்கி பலியானார். இந்த சம்பவத்தில் உயிரிழந்த அனை வருக்கும் இரங்கல் தெரிவித்துள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி விழுப்புரம் மாவட்டச் செயலாளர் என்.சுப்பிரமணியன்,“ நீரில் மூழ்கி பெரும் துயரத்திற்கு ஆளாகி யுள்ள அந்த குடும்பத்திற்கு தமிழக அரசு நிவாரணம் வழங்க வேண்டும். பாதிக்கப்பட்ட குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு இல்லாமல் உள்ள குவாரிகளுக்கு தடுப்பு வேலிகள் அமைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.