சென்னை, ஜூலை 31 - உச்ச நீதிமன்ற உத்தர வுப்படி அனைத்து கல்லூரி, பல்கலைகழகங்களிலும் மாணவர் பேரவை தேர்தலை நடத்த வேண்டு மென்று இந்திய மாணவர் சங்கத்தின் தென்சென்னை மாவட்ட மாநாடு வலி யுறுத்தி உள்ளது. சங்கத்தின் 27வது மாவட்ட மாநாடு ஞாயிறன்று (ஜூலை 31) தாம்பரத்தில் நடைபெற்றது. இந்த மாநாட்டில், சட்டத்திற்கு புறம்பாக செயல்பட்டு வரும் டி.பி.ஜெயின் கலை மற்றும் அறிவியல் கல்லூ ரியை அரசே ஏற்று நடத்த வேண்டும், தேசிய கல்விக் கொள்கையை திரும்ப பெற வேண்டும். மாநகராட்சி பள்ளிகளில் வகுப்பறைகளின் எண்ணிக் கையை அதிகரிக்க வேண்டும். 13 ஆயிரத்து 331 பேர் ஆசிரியர் பணியிடங் களை காலமுறை ஊதியத் தில் நியமிக்க வேண்டும், கல்வி நிலையங்களில் ஏற்படும் மர்ம மரணங்கள் மற்றும் பாலியல் வன்முறை களை தடுப்பதோடு, அத்த கைய குற்றங்களின் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள் ளிட்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன. மாவட்டத் தலைவர் ச.ஆனந்த் தலைமையில் நடைபெற்ற மாநாட்டில் மத்தியக்குழு உறுப்பினர் ரா.ஜான்சிராணி கொடி யேற்றினார். துணைத் தலைவர் ப.க.புகழ்ச்செல்வி வரவேற்றார். இணைச் செய லாளர் நா.குமரன் அஞ்சலி தீர்மானத்தை வாசித்தார். மேனாள் துணைவேந்தர் எல்.ஜவகர் நேசன் மாநாட்டை தொடங்கி வைத்தார். மாவட்டச் செயலாளர் ரா.பாரதி வேலை அறிக்கையை சமர்ப்பித்தார். வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் தீ.சந்துரு, மாதர் சங்க மாவட்ட நிர்வாகி ரேவதி ஆகியோர் வாழ்த்திப் பேசினர். மாநிலச் செய லாளர் வி.மாரியப்பன் நிறை வுரையாற்றினார். தாம்பரம் ஒருங்கிணைப்பாளர் வி.தர்ஷினி நன்றி கூறினார். 29 கொண்ட மாவட்டக் குழுவின் தலைவராக ச.ஆனந்த், செயலாளராக ரா.பாரதி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.