கடலூர், மே 16- கொரோனா பரவலைக் கட்டுப்ப டுத்த அறிவிக்கப்பட்ட திடீர் அறி விப்பால் சிறுவியாபாரிகள் அதிக பொருளாதார இழப்பினை சந்தித்த னர். கொரோனா இரண்டாம் அலை யைத் தொடர்ந்து தமிழகத்தில் மே 10ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய பொது முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், மளிகை, காய்கறி, டீ கடை கள், பழக்கடைகள் பகல் 12 மணி வரையில் திறந்திருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது. பின்னர் 15ஆம் தேதி முதல் சாலை யோர தரைக்கடைகள், தள்ளு வண்டி கடைகளில் விற்பனை செய்வ தற்கு தமிழக அரசு 14ஆம் தேதி மாலை தடை விதித்தது. இதனால், சிறு வியாபாரிகள் மிகுந்த அதிர்ச்சிக் குள்ளாகினர். கடலூர் மாவட்டத்தில் சுமார் 10 ஆயிரம் பேர் வரை தள்ளு வண்டிக் கடை, சாலையோரத்தில் தரைக்கடை வைத்து வியாபாரம் செய்து வருகின்றனர். இவர்கள் அனைவரும் மிகக் குறைந்த முத லீட்டில் அன்றாடம் வியாபாரம் செய்ப வர்கள்.
பெரும்பாலும் தினசரி கடன் பெற்று வியாபாரம் முடிந்த பின்னர் வட்டியுடன் கடனை திருப்பி செலுத்துபவர்கள். அரசு திடீரென இவர்கள் வியாபா ரம் செய்வதற்கு தடை விதித்ததால் அவர்களால் கடையைத் திறக்க முடியாத நிலை ஏற்பட்டது. சாலை யோரத்தில் விற்பனை செய்யும் சிறு வியாபாரிகள் தங்களது சனிக்கிழமை வியாபாரத்திற்காக வாழைப்பழம், காய்கறி, கீரைகள் போன்றவற்றை வெள்ளிக்கிழமையே வாங்கி வைத்துள்ளனர். அரசின் இந்த திடீர் தடையால் அந்த பொருட்களை விற்பனை செய்ய முடியாததோடு, அவை அழுகி வீணாகிப் போகும் நிலை உருவாகியுள்ளது. எனவே வைத்துள்ள பொருட் களை விற்பனை செய்ய சில நாட்கள் அவகாசம் அளித்திருந்தால் மிகப்பெரிய பொருளாதார நஷ்டத்தை தாங்கள் சந்தித்திருக்க மாட்டோம். ஏற்கனவே, நேரக்கட்டுப் பாட்டினால் வியாபாரம் குறைந்த நிலையில் தற்போது கடுமையான இழப்பினை சந்தித்ணதிருப்பதாக அவர்கள் தெரிவித்தனர். எனவே, மற்ற கடைகள் காலை 6 மணி முதல் 10 வரை வியாபாரம் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது போல் தங்களையும் 10 மணி வரை வியாபாரம் செய்ய அனுமதிக்க வேண் டும் என்று கோரிக்கை விடுத்தனர்.