விழுப்புரம்,செப்.6 - கண்டாச்சிபுரம் வட்டத்தில் அரசு அலுவ லகங்கள் அமைக்க வலியுறுத்தி திங்க ளன்று (செப்.6) கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. விழுப்புரம் மாவட்டத்திற்குட்பட்ட கண்டாச்சிபுரம் வட்டமாக தரம் உயர்த்தப் பட்டு ஏழு ஆண்டுகளாகிறது. ஆனால் இது வரை வட்டத்திற்கு ஏற்ற எந்த அரசு அலு வலகங்கள், அடிப்படை கட்டமைப்பு வசதி கள் செய்து தரவில்லை. வீரங்கிபுரம் மேல்வாலை எல்லைக்கு உட்பட்ட சுமார் 30 ஏக்கர் புறம்போக்கு நிலத்தை கையகப்படுத்தி அரசு அலுவல கங்கள் கட்ட வேண்டும். மடவிளாகம் கால் நடை மருத்துவமனை அருகில் உள்ள அரசுக்கு சொந்தமான 16 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தி அரசு அலுவலகங்களை அமைக்க வேண்டும் என வலியுறுத்தி தாலுகா முழுவதும் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.
இதன் தொடர்ச்சியாக திங்களன்று (செப்13) அமைச்சர் மற்றும் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளிப் பது என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த இயக்கத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியை சேர்ந்த கண்டாச்சிபுரம் வளர்ச்சிக் குழு ஒருங்கிணைப்பாளர் எஸ். கணபதி தலைமை தாங்கினார். இதில் மாற்றுத்திறனாளிகள் சங்க நிர்வாகிகள் பி.முருகன், எம்.முருகன் மற்றும் கே. விசாலாட்சி (மகளிர் சுய உதவி குழு), கலை வாணி, வி. கிருஷ்ணமூர்த்தி (அம்பேத்கர் பேரவை), கே. சங்கர், வி.ஆர். ரஜினி, பி.முருகானந்தம் (சமூக செயல்பாட்டா ளர்கள்), ஆர்ஸ்ட் முருகன் (ஓவியர்சங்கம்), ஆர். சுந்தரபாண்டியன், எஸ்.குணசேகரன் (அரிமா சங்கம்), எம்.ராமலிங்கம் (விச), ஆர். சேட்டு, எஸ்.பக்தவச்சலம் (காங்கிரஸ்), கே.முருகன், ரமணாமுருகன் (தேமுதிக), ஏ.சக்திவேல் (பாமக), ஆறுமுகம்(ஆட்டோ), ஜெ.சவுந்தரராஜன், அ.சவுரிராஜன் (சிபிஐ), எம்.பாபு, வி.சேகர் (சிபிஎம்) உட்பட பலர் கலந்து கொண்டனர்.