ராணிப்பேட்டை, பிப். 9- ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ஜெய்சங்கர் என்ற மாற்றுத்திறனாளி தன்னுடைய வீடு பிரச்சனை தொடர்பாக புகார் அளிக்க வந்தார். அவரால் மாடி படியின் மீது ஏறி வந்து மனு அளிக்க முடியாததை அறிந்த மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் (தலைமையிடம்) விஸ்வேஸ்வரய்யா, கீழே இறங்கி வந்து மாற்றுத்திறனாளியுடன் மனுவை பெற்றார். மேலும் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்கதார். கடந்த சில தினங்களுக்கு முன்பு விஸ்வேஸ்வரய்யா ராணிப்பேட்டை அரசு பள்ளி மைதானத்தில் நடை பயிற்சியின் போது மைதானத்தில் பயிற்சியில் இருந்த ஒரு நபர் மயங்கி விழுந்த தகவல் அறிந்து, காவல் துறை வாகனம் மூலம் அந்த நபரை வாலாஜா அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தது குறிப்பிடத்தக்கது.