சென்னை, நவ. 28 - அரசின் தடையை மீறி தனியார் பள்ளி யில் ஆர்எஸ்எஸ் கூட்டம் நடைபெற்றது. இதனை கண்டித்து அப்பள்ளி முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போராட்டம் நடத்தியது. அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனி யார் கல்வி நிறுவனங்களில் மதம் சார்ந்த நிகழ்வுகள், அமைப்புகளின் கூட்டம் நடத்த தமிழக அரசு தடை விதித்துள்ளது. இதனை மீறி, சென்னை அண்ணாநகரில் உள்ள ஜெயகோபால் கரோடியா விவேகானந்தா வித்யாலயா மெட்ரிக்குலேஷன் உயர்நிலைப் பள்ளியில் நவ.26-27 தேதிகளில் ஆர்எஸ்எஸ் கூட்டம் நடைபெற்றுள்ளது. இதில், பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா, பொன்.ராதா கிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர். தமிழக அரசின் தடையை மீறி கூட்டம் நடத்த அனுமதி அளித்த, பள்ளி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் திங்க ளன்று (நவ. 28) பள்ளியை முற்றுகை யிட்டு போராட்டம் நடத்தினர். இத னால் காவல்துறையினருக்கும், போராட்டக் காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு நடைபெற்றது. அப்போது கட்சியின் மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் ஜி.செல்வா செய்தி யாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தின் மத அமைதியை சீர்குலைக்கும் வகையில் 2 நாள் சதி ஆலோசனை கூட்டம் நடத்தியுள்ளனர். இதற்கு இடம் அளித்த பள்ளி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு தடை உத்தரவையும் மீறி 2 நாள் கூட்டம் நடத்த காவல்துறை எப்படி அனுமதித்தது; துணை போனது? பள்ளி நிர்வாகத்தின் மீது வழக்கு பதிய வேண்டும். இதில் தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுக்காவிடில் தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம். ஆர்எஸ்எஸ் உள்ளிட்ட அமைப்புகள் கல்வி நிலையங்களில் போராட்டம் நடத்தி னால் அதனை எதிர்த்து ஜனநாயக சக்தி கள் போராட வேண்டும்” என்றார். இந்தப் போராட்டத்தில் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஆர்.முரளி, சி.திருவேட்டை, எஸ்.கே.முருகேஷ், இ.சர்வேசன், ஆறுமுகம், அண்ணாநகர் பகுதிச் செயலாளர் மகேந்திரவர்மன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.