திருவள்ளூர் மா.பொ.சி. சாலையில் உள்ள கூட்டுறவு நியாய விலைக் கடையில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் நிவாரண நிதி ரூ.2000 மற்றும் 14 வகையான மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு ஆகியாவை முறையாக வினியோகப்படுகிறதா என மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் ஆய்வு செய்தார். உடன் கூட்டுறவு சங்கத்தின் இணைப்பதிவாளர் ஜெயஸ்ரீ உள்ளார்.