சென்னை, நவ. 5 - மக்களை 40 ஆண்டுகளாக வசிக்கும் இடத்திலிருந்து வெளி யேற்ற முயற்சிப்பதை தடுக்க வேண்டு மென்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பால கிருஷ்ணனிடம் குடியிருப்புவாசிகள் முறையிட்டனர். பர்மாவிலிருந்து வந்த அகதி களுக்காக, பர்மா இந்தியர் கூட்டுறவு வீடு கட்டும் சங்கம் தொடங்கப்பட்டது. இந்த சங்கம், 1968ம் ஆண்டு 24.5 ஏக்கர் நிலத்தை வாங்கி 312 மனைக ளாக பிரித்து விற்றது. இந்த நிலத்தை வாங்கியவர்களில் பெரும்பகுதியினர் இங்கு குடியேறவில்லை. இதனை யடுத்து நிலத்தரகர்கள், உரிமை யாளர்களிடம் இருந்து வாங்கி விற்று விட்டனர். இவ்வாறாக 20 ஏக்கர் நிலத் தில், சிறு குறு தொழில் நிறுவனங்கள் அமைந்துள்ளன. இதில் எஞ்சிய 4.5 ஏக்கர் பள்ளமான இடத்தில் முட்புதர்கள் மண்டி கிடந்தன. சென்னைக்கு பிழைப்பு தேடி வந்த மக்கள் இந்த பகுதியை மேம்படுத்தி குடியேறினர். திருவள்ளுவர் நகர் என அழைக்கப்படும் இந்த பகுதியில் 400 குடும்பங்கள் வசிக்கின்றன. சென்னை மாநகராட்சியின் 182வது வட்டம், பாலவாக்கத்திற்கு உட்பட்ட இந்த பகுதி மக்கள் வீட்டு வரி செலுத்தி வருகின்றனர். இங்குள்ள வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்கி, தெருக்க ளில் மின்விளக்குகள் அமைக்கப் பட்டுள்ளது. வீதிகளில் மழை நீர் கால்வாய் கட்டமைப்பு உருவாக்கப் பட்டுள்ளது. குடிநீர் இணைப்பு, குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை போன்றவை யும் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நிலத்தரகர்களும், அரசு நிர்வாகமும் இணைந்து மக்களை வெளியேற்ற முயற்சித்து வருகின்றன.
இதனையடுத்து சனிக்கிழமையன்று (நவ.5) சிபிஎம் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணனை சந்தித்து அப்பகுதி மக்கள் முறையிட்டனர். திருவள்ளுவர் நகரில் உள்ள பகத்சிங் மக்கள் நலச்சங்க நிர்வாகிகள் எஸ்.ெஜயபிரகாஷ், லோ.வரதன் ஆகியோர் மனு அளித்தனர். அப்போது பேசிய மக்கள், “நிலத் தரகர்கள் சிலர், அரசு அதிகாரிகளின் உதவியோடு சட்டத்திற்கும், இயற்கை நீதிக்கும் புறம்பாக குடியிருப்பு பகுதியை கிரயம் செய்து, மக்களை வெளியேற்ற முயற்சித்து வருகின்ற னர். இது தொடர்பான வழக்குகளில் நீதிமன்றங்கள் மாறுபட்ட தீர்ப்புக் களை வழங்கியுள்ளன. திருவள்ளுவர் நகரில் ஆறுபேர் மட்டுமே பர்மா அகதி களாக உள்ளனர். எனவே, நீண்ட கால மாக வசிக்கும் மக்களுக்கு, அந்த இடத்தை சொந்தமாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கோரினர். இந்நிகழ்வின்போது கட்சியின் தென்சென்னை மாவட்டச் செயலாளர் ஆர்.வேல்முருகன், செயற்குழு உறுப்பினர் கே.வனஜகுமாரி, பகுதிச் செயலாளர் ஜெயவேல், சோழிங் கநல்லூர் தொகுதி குடியிருப்போர் நலச்சங்கங்களின் பேரமைப்பு தலைவர் டி.ராமன் ஆகியோர் உடனி ருந்தனர்.