districts

img

சாலையை  சீரமைக்க கோரிக்கை

விழுப்புரம், டிச. 17- விழுப்புரம் மாவட்டம், கண்ட மங்கலம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ளது  பெரியபாபுசமுத்திரம் கிராமம். இந்த கிராமத்தில் இருந்து ஏரிக்கரை வழியாக வனத்தாம்பாளையம் செல்லும்  சாலை சேறும் சகதியுமாக மாறி மக்கள்  பயன்படுத்த முடியாத அளவு மோச மாக உள்ளது. மேலும் 10க்கும் மேற்பட்ட கிராம  மக்கள் இந்த சாலையாக பயன்படுத்தி புதுச்சேரி மற்றும்  விழுப்புரம் பகுதிகளுக்கு சென்று வந்தனர். தற்போது சாலை சேறும் சகதியு மாக மாறியுள்ளதால் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்துக்குள்ளாகின்றனர். எனவே பெரியபாபு சமுத்திரத்தில் இருந்து வனத்தாம்பாளையம் செல்லும் ஏரிக்கரை சாலையை உடனடியாக சீர மைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை  எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.