சென்னை, ஏப்.11- சென்னையில் 2022-23ம் ஆண்டிற்கான முதல் அரையாண்டு சொத்து வரியினை வரும் 15ஆம் தேதிக்குள் செலுத்தி 5 விழுக்காடு ஊக்கத்தொகை யினை பெற்று பயனடையுமாறு சென்னை மாநகராட்சி கேட்டுக்கொண்டுள்ளது. இதுகுறித்து சென்னை மாநகராட்சி விடுத்துள்ள அறிக்கையில்,சொத்துவரியினை, மண்டல அலுவலகங்கள், வார்டு அலுவலகங்களில் உள்ள இ-சேவை மையங்கள், இணையதளம், நம்ம சென்னை செயலி, பேடிஎம் (ஞயலவஅ), கிரெடிட் அல்லது டெபிட் கார்டு ஆகியற்றின் வாயிலாகவும், பெருநகர சென்னை மாநகராட்சி வரி வசூலிப்பாளர் கள்,உரிமம் ஆய்வாளர்கள் வாயிலாகவும் எளிதாக செலுத்தலாம்.
புதிய சொத்து வரி விகிதம்
மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் சொத்து வரி சீராய்வு செய்ய தமிழ்நாடு அரசால் அமைக்கப்பட்ட சொத்து வரி சீராய்வு குழு பரிந்துரை செய்துள்ளது. பெருநகர சென்னை மாநக ராட்சியைப் பொறுத்தவரையில், சீராய்வு குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில், புதிய சொத்து வரி வீதம் மன்றத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அமல்படுத்தப்படும். எனவே, 2022-23ம் ஆண்டு முதல் அரை யாண்டுக்கான சொத்து வரியினை ஏற்கனவே மாநகராட்சிக்கு செலுத்தி வந்த கட்டண விகிதத்தி லேயே வரும் 15 ஆம் தேதிக்குள் செலுத்தும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். தவறும் நபர்க ளுக்கு 2விழுக்காடு தண்டத் தொகையுடன் சொத்து வரி வசூலிக்கப்படும். மறுசீராய்விற்கு பிறகான சொத்து வரி கட்டணம் மன்றத் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பிறகு முறை யாக அறிவிக்கப்படும். அதன் பின்னர், சொத்து உரிமை யாளர்கள் தங்களின் 2022-23ம் ஆண்டு முதல் அரை யாண்டுக்கான மீதமுள்ள சொத்து வரியினை செலுத்த லாம் என்றும் இதில் ஏதேனும் குறைபாடுகள் அல்லது சிக்கல்கள் இருந்தால் ‘1913’ என்ற தொலை பேசி எண்ணை தொடர்பு கொள்ளுமாறும் மாநகராட்சி கேட்டுக்கொண்டுள்ளது.