districts

சாலைகள் மறுசீரமைப்பு  

சென்னை, மார்ச் 17- சென்னை மாநகராட் சியில் சிங்காரச் சென்னை 2.0 திட்டத்தின் கீழ், ரூ.124.71 கோடியில் 204.82 கி.மீ. தொலைவுக்கு பேருந்து மற்றும் உட்புறச்சாலைகள் உள்பட 1,157 சாலைகளை சீரமைக்கும் பணிகள் மேற்  கொள்ளப்பட்டு வரு கின்றன. நகர்ப்புறச் சாலைகள்  மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ், ரூ.151 கோடியில் 221.88 கி.மீ. நீளத்தில் 1408 சாலை கள் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இப்பணிகளை தொடர்ந்து கண்காணிக்க மாநகராட்சி ஆணையர் தலைமையில் அலுவலர்கள், பொறியா ளர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டது. அதனடிப்படையில் மணலி, ராயபுரம், வளசரவாக்கம், உள்ளிட்ட 19 இடங்களில் பழைய சாலைகள் சீரமைக் கப்படுகின்றன.