ராணிப்பேட்டை, அக்.16 - தமிழ்நாடு மின் தொடர மைப்பு கழகம் மற்றும் பவர்கிரிட் நிறுவனம் சார்பில் அமைக்கப்படும் உயர்மின் கோபுரங்களால் பாதிக்கும் ராணிப்பேட்டை விவசாயி களுக்கு உயர்ந்தபட்ச இழப்பீடு வழங்கக் கோரி தமிழ்நாடு விவ சாயிகள் சங்கத்தின் சார்பில் கடந்த 5 நாட்களாக போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், மாவட்ட வருவாய் அலுவலர் ப.குமரேஸ் வரன் தலைமையில் ஞாயிற்றுக் கிழமை (அக். 16) முத்தரப்பு பேச்சு வார்த்தை நடைபெற்றது. இதில் வட்டாட்சியர் ஆனந்தன், விவ சாயிகள் சங்கத்தின் மாநிலச் செயலாளர்கள் பி.டில்லி பாபு, பி.துளசி நாராயணன், திரு வண்ணாமலை மாவட்டச் செய லாளர் எஸ்.பலராமன், ராணிப்பேட்டை மாவட்ட செய லாளர் எல்.சி.மணி, தலைவர் எஸ்.கிட்டு, பொருளாளர் சி.ராதா கிருஷ்ணன், தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழகம் சார்பில் டி.சந்திரசேகர், ஏ.பாலையா, பவர்கிரிட் சார்பில் ஏ.ரேணு கேஸ்வரா ராவ் மற்றும் பாதிக்கப்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர். இந்த பேச்சுவார்த்தையின் போது, சரிபாதி விவசாயிக ளுக்கு முழுமையான இழப்பீடு வழங்கப்படவில்லை என்றும் திருவண்ணாமலை, கோவை போன்ற பிற மாவட்டங்க ளில் மின் கோபுரங்கள் அமைத்த போது பாதிக்கப்பட்ட விவ சாயிகளுக்கு அந்த மாவட்ட நிர்வாகங்கள் வழங்கியது போன்று ஏன் வழங்க மறுப்பது ஏன் என்றும் கேள்வி எழுப்பினர்.
2017ஆம் ஆண்டின் அர சாணை எண். 63, 2019 ஆம் வருடத்தின் அரசாணை எண். 84 ஆகியவற்றின்ன அடிப்படையில் பயிர், மரம், கிணறு, வீடு, பம்பு செட் ஆகியவற்றிற்கும், நிலத்திற்கும் பவர்கிரிட் கட்டுமானப் பணிக்கும் திருவண்ணாமலை மற்றும் கோவையில் நிவாரணம் உயர்த்தி வழங்கப்பட்டது. ஆனால், ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஒரே கிராமத்தில் பக்கத்து, பக்கத்து நிலத்திற்கு வழங்கப்பட்ட இழப்பீட்டுத் தொகையிலேயே வேறுபாடு உள்ளது. எனவே உயர்ந்தபட்ச இழப்பீடு பெற்றுத்தர மாவட்ட நிர்வாகம் முன்வர வேண்டும் என்றும் விவசாயிகள் சங்கத் வலியுறுத்தினர். இதற்கு பதில் அளிளத்து பேசிய மாவட்ட வருவாய் அலு வலர் ப.குமரேஸ்வரன், 2 நாட்க ளில் விசாரணை மேற்கொண்டு விவரங்களை சேகரித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று வாக்குறுதி அளித்தார். ஆனால் சங்கத் தலைவர்கள் விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு கிடைக்கும் வரை போராட்டம் தொடரும் என அறிவித்தனர். இதைத் தொடர்ந்து விவ சாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டத்தை வசாயிகள் சங்கத்தின் வேலூர் மாவட்டத் தலைவர் சக்திவேல், பொரு ளாளர் மகாலிங்கம் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். இந்த நிலையில் ஆட்சியர் அலுவலகத்தில் திங்க ளன்று (அக்.17) நடந்த பேச்சு வார்த்தையில் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் சாமிநடராஜன் தலைமையில் நடந்த பேச்சுவார்த்தையில் பங்கேற்ற ஆட்சியர், நியமான கோரிக்கையை நிறைவேற்ற முன்வராமல் அலட்சியத்துடன் நடந்து கொண்டார். இதனால் போராட்டம் தொடர்கிறது.