விழுப்புரம்,டிச.12- இளம் வழக்கறிஞர்களுக்கு ரூ.5 ஆயிரமாக உதவித் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என்று அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கம் வலி யுறுத்தியுள்ளது. அகில இந்திய வழக்கறி ஞர்கள் சங்கத்தின் விழுப்புரம் மாவட்ட 12-வது மாநாடு விழுப்பு ரத்தில் மாவட்டத் தலைவர் எம்.கே.முருகன் தலைமையில் நடைபெற்றது. மாநில செயல் தலைவரும், தமிழ்நாடு,புதுச்சேரி பார் கவுன்சில் உறுப்பினருமான ஏ.கோதண்டம் மாநாட்டை தொடங்கி வைத்தார். தேசிய குழு உறுப்பினர் ஆர்.ராமமூர்த்தி நிறைவுறையாற்றினார். கே.எஸ்.ஐயப்பன், எம்.தமிழரசன், சே.அறிவழகன், எம்.ஐ.அலாவுதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ரஞ்சித் பாபு வரவேற்றார். மாவட்டச் செய லாளர் வழக்கறிஞர் வி.கதிரேசன் வேலை அறிக்கையை சமர்ப்பித்தார். மாநிலத் துணைத் தலைவர் ஏ சங்கரன், பார் அசோசியேஷன் தலைவர் வி.தயானந்தம், லாயர் அசோசியேஷன் தலைவர் ஏ.பி.நீலமேகவண்ணன், குற்றவியல் நீதிமன்ற பார் அசோசியேஷன் எம்.காளிதாஸ், வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் கே.பி.ஸ்ரீதர் ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.எஸ் பாலமுருகன் நன்றி கூறி னார். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை பாதுகாக்க வேண்டும், நீதித்துறையில் ஜனநாயகத்தை காக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்களை நிறைவேற்றினர்.
நிர்வாகிகள்
மாவட்டத் தலைவராக எஸ். பாலமுருகன், மாவட்டச் செய லாளராக வி.கதிரேசன், பொரு ளாளராக கே.எஸ். ஐயப்பன் உட்பட 22 பேர் கொண்ட மாவட்டக் குழுவும் தேர்வு செய்தனர்.