வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி சிஐடியு, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் காஞ்சிபுரத்தில் மக்கள் சந்திப்பு இயக்கம் நடைபெற்றது. இதில் விவசாயிகள் சங்கம் மாவட்டச் செயலாளர் கே.நேரு, சாரங்கன், கைத்தறி சங்கம் மாவட்ட பொருளாளர் எஸ்.பழனி, மாவட்ட குழு உறுப்பினர் வி.சிவப்பிரகாசம், வி.வேலு, சீனிவாசன், மாற்றுத்திறனாளி சங்கம் மாவட்டக்குழு உறுப்பினர் வி.அரிகிருஷ்ணன், ரமேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.