சென்னை, செப். 7 - மாநகராட்சி பூங்காக்களை முறையாக பராமரிக்காத ஒப்பந்ததாரர்களுக்கு கடந்த 5 மாதத்தில் 13.68 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மாநகராட்சி பூங்கா துறையில் கீழ் 738 பூங்காக்கள் உள்ளன. இவற்றில் 571 பூங்காக்கள் தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஒப்பந்தத்தில் உள்ளபடி பணியாளர் எண்ணிக்கை, பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளாத ஒப்பந்ததாரர்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. மூன்று முறைக்கு மேல் பணியாளர் பற்றாக்குறை கண்ட றியப்பட்டால் சம்பந்தப்பட்ட பூங்கா பராமரிப்பு ஒப்பந்தம் ரத்து செய்யப்படுகிறது. இதன்படி கடந்த ஏப்ரல் மாதம் முதல் செப்.3 வரையிலான 5 மாதத்தில் பூங்காக்களை பராமரிக்காத ஒப்பந்த நிறுவனங்களுக்கு 13.68 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.