சென்னை,பிப்.17- இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மயிலாப்பூர் பகுதிக்குழுவும், சீ ஸ்ட்ரோம் விளையாட்டுக் குழுவும் இணைந்து நடத்தும் ‘சிந்தனை சிற்பி ம.சிங்கார வேலர் நினைவு கோப்பை’ மின்னொளி கைப்பந்து போட்டியை பிப்.15-16 தேதிகளில் நடத்தியது. சென்னை மெரினா கடற்கரை நொச்சிக் குப்பம் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் 28 அணிகள் பங்கேற்றன. போட்டியை வாலிபர் சங்கத்தின் தென்சென்னை மாவட்டச் செயலாளர் தீ.சந்துரு தொடங்கி வைத்தார். முதல் 6 இடங்களை பிடித்த அணிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. முதல் இடம் பிடித்த பனையூர் அணிக்கு கோப்பையும் ரூ.7 ஆயிரம் ரொக்கமும் பரிசாக வழங்கப்பட்டது. இந்நிகழ்வுக்கு சங்கத்தின் மயிலை பகுதிச் செயலாளர் எஸ்.மகேஷ் தலைமை தாங்கினார். மாமன்ற உறுப்பினர்கள் அ.ரேவதி (125வது வார்டு), எம்.சரஸ்வதி (123வது வார்டு), சென்னை கோஸ்டல் கபடி மேம்பாட்டு செயலாளர் எஸ்.சிவ ராமன், ராணுவவீரர் ராஜமன்னார், மோகனவேலன், வாலிபர் சங்க மாவட்டத் தலைவர் எம்.ஆர்.சுரேஷ், துணைச்செயலாளர் கே.சிவக்குமார், செயற்குழு உறுப்பினர் ஆர்.நிவேதா, சென்னை மக்கள் மேடை ஒருங்கிணைப்பாளர் எஸ்.குமார், எம்ஜிஎம் மலர் மருத்துவமனை ஊழியர் சங்க பொதுச்செயலாளர் ஐ.ஆர்.ரவி, போக்கு வரத்து ஊழியர் சங்க தலைவர் எஸ்.பரமசிவம், மீன்பிடி சங்க மாவட்டத் தலைவர் ஜெ.அன்புரோஸ், வாலிபர் சங்க பகுதிக்குழு உறுப்பினர் ஏ.பிரீத்குமார், சீ ஸ்ட்ரோம் விளையாட்டுக்குழு எஸ்.பிரகாஷ் உள்ளிட்டோர் பரிசுகளை வழங்கி பேசினர்.