சென்னை.ஏப்,11- பார்கின்சன்’ஸ் நோயால் பாதிக்கப்பட்ட 20 நபர்கள் வரைந்த ஓவியங்களின் கண்காட்சியினை தமிழ்நாடு அரசின் கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறையின் முதன்மை செயலர் டாக்டர். ஜெ. ராதாகிருஷ்ணன் குரோம்பேட்டை ரேலா மருத்துவமனையில் செவ்வாயன்று (ஏப்.11) தொடங்கி வைத்தார். உலக பார்கின்சன்’ஸ் தினத்தை முன்னிட்டு ஏப்,11 ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரை பார்கின்சன்’ஸ் நோயாளிகளுகளுக்கு மருத்துவருடன் இலவச கலந்தாலோசனை சேவையை ரேலா மருத்துவமனை வழங்குகிறது நடுங்கும் கைகள் நேர்த்தியான ஓவியங்கள் வரைவதற்கு தடையாக இருப்பதில்லை. மற்றவர்களுக்கு ஊக்கமும் உத்வேகமும் அளிக்கும் உரை நிகழ்த்துவதற்கு நினைவுத்திறன் இழப்பு ஒரு தடங்கலாக இருப்பதில்லை. வாழ்க்கையின் ஆனந்தம் படைப்புத்திறனோடு கைகோர்க்கும்போது அழகான ஓவியம் உருவாகிறது என்று மருத்துவமனையின் நிர்வாகி டாக்டர் முகமது ரேலா கூறினார். இந்த கண்காட்சியில் இடம் பெற்றுள்ள ஓவியங்கள் உடல்தளர்ச்சி நோயால் பாதிக்கப்பட்டுள்ள 20 கலையார்வலர்களின் படைப்புத்திறன் என்பது குறிப்பிடத்தக்கது. உலகளவில் தோராயமாக ஒரு கோடிப்பேர் பார்கின்சன்’ஸ் நோயோடு வாழ்கின்றனர். 2040ஆம் ஆண்டிற்குள் இந்த எண்ணிக்கை இருமடங்காகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் ஏறக் குறைய 1 0 லட்சம் பேருக்கு இந்நோய் இருப்ப தாக அறியப்பட்டிருக்கிறது. தமிழகத்தில் 10 லட்சம் பேரில் 50 முதல் 100 பேருக்கு இந்த நோய் இருப்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது.