சென்னை, ஜன.18- தமிழ்நாட்டில் பட்டா மாறுதல் செய்வதற்கான புதிய மென்பொருளை முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் தொடங்கி வைத்தார். அங்கீகரிக்கப்பட்ட வீட்டு மனைப் பிரிவில் பொது மக்கள் மனைகள் வாங்கும் போது ஒவ்வொரு மனுதாரருக்கும் உட்பிரிவு செய்ய, தனித்தனியாக மனுக்கள் பெறப்படும் சூழல் இருந்து வருகிறது. இவ்வாறு ஒரே மனைபிரி வில் உள்ள வீட்டு மனை களை நில அளவை செய்து உட்பிரிவு செய்வதற்காக நில அளவர் பல்வேறு தினங்களில் தனித்தனியே செல்லவேண்டிய சூழலும் இருக்கிறது. தமிழ்நாட்டில் ஒவ் வொரு மாதமும் 1.50 லட்சம் உட்பிரிவு மனுக்கள் பெறப்படுகிறது. அதில் பெரும்பாலான மனுக்கள் மனைப்பிரிவைச் சார்ந் தவை. இதனால், உட்பிரிவு பட்டா மாறுதல் பெறுவதில் காலதாமதம் ஏற்படுகிறது. தற்போது முதல மைச்சரால் தொடங்கி வைக்கப்பட்டுள்ள இப்புதிய மென்பொருள் மூலமாக மனைப்பிரிவுகளை ஒட்டு மொத்தமாக உட்பிரிவு செய்து மனைப்பிரிவின் உரிமையாளர்களின் பெய ரில் பதிவு செய்யப்படு வதால், பின்னாளில் மனை களை உட்பிரிவு செய்யக் கோரி தனித்தனியாக மனுக் கள் வரப்பெறுவது தவிர்க் கப்பட்டு, மனைப்பிரிவுகள் சார்ந்த உட்பிரிவு மனுக்க ளின் எண்ணிக்கை குறைந்து மக்களுக்கு விரைவில் பட்டா வழங்கும் சூழல் ஏற்படும். இப்புதிய மென் பொருள் மூலமாக, அங்கீ கரிக்கப்பட்ட மனைப்பிரி வில் உள்ள அனைத்து மனை களும் உட்பிரிவு செய்யப் பட்டு, மனைப்பிரிவின் உரி மையாளர் பெயரிலேயே பட்டா வழங்கப்படும். மேலும், தனித்தனியே பொதுமக்கள் அம்மனைப் பிரிவில் ஒரு மனையை வாங்கும்போது பதிவு செய்யப்பட்ட சில நிமிடங் களி லேயே தானியங்கி பட்டா மாறுதல் முறையில் கிரையம் பெற்ற பொது மக்களின் பெயரில் மாற்றம் செய்யப்படும். பட்டா மாற் றத்திற்காக பொதுமக்கள் மீண்டும் தனியே விண்ணப் பிக்கவோ அல்லது வட்டாட் சியர் அலுவலகத்திற்கு நேரில் செல்ல வேண்டிய அவசியமின்றி அவர்களது இன்னல்கள் தவிர்க்கப் படும். மனைப்பிரிவில் உள்ள பொதுப்பயன்பாட்டிற்காக ஒதுக்கப்பட்ட நிலங்களான சாலைகள், பூங்கா போன்ற நிலங்கள் தனியே உட்பிரிவு செய்யப்பட்டு அந்த இடம் சார்ந்த உள்ளாட்சி அமைப்பு களின் பெயரில் உடனுக்கு டன் நில ஆவணங்களில் பதிவு செய்யப்படும். இத னால், அரசு நிலங்களை ஆக்கிரமிப்பு செய்வதி லிருந்து தடுக்க இயலும். மேலும், இதுபோன்ற பொதுப்பயன்பாட்டிற்கான நிலங்களை மோசடியாக விற்பனை செய்யும் நிகழ்வு களும் தவிர்க்கப்படும்.