சென்னை,மார்ச் 25- சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக வண்ட லூர் அருகே உள்ள கிளாம்பாக்கத்தில் புதிய புறநகர் பேருந்து நிலையம் கட்டப்பட்டு வருகிறது. அங்கிருந்து தென் மாவட்டங்க ளுக்கு செல்லும் பேருந்துகளை இயக்க போக்குவரத்து கழகம் முடிவு செய்துள்ளது. இந்த நிலையில் புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டு திறக்கப்பட உள்ளது. இங்கு உள்ள பேருந்து நிலையத்தை சென்னையின் அனைத்து பகுதிகளை இணைக்கும் வகையில் சென்னையின் பல பகுதி களில் இருந்து மாநகர பேருந்துகள் அதிக அளவில் இயக்கப்பட உள்ளன. மேலும் வண்டலூர்- ஊரப்பாக்கம் இடையே புதிய மின்சார ரயில் நிலையம் அமைக்க திட்ட மிடப்பட்டுள்ளது. இதற்கிடையே மெட்ரோ ரயில் சேவையை பயன்படுத்த வசதியாக சென்னை விமான நிலையம் முதல் கிளாம்பாக்கம் வரை மெட்ரோ ரயில் திட்டத்தை நீட்டிக்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான அறிவிப்பு கடந்த 2018-ம் ஆண்டு வெளியிடப்பட்டு அதற்கான விரிவான திட்ட அறிக்கையும் தயாரிக்கப்பட்டது. இந்த திட்டத்தின்படி 15 கி.மீ. தொலைவுக்கு மெட்ரோ ரயில் திட்டம் நீட்டிக்கப்படுகிறது. இதற்கு ரூ.4080 கோடி செலவாகும். இந்த நிலையில் கிளாம்பாக்கத்தில் மெட்ரோ ரயில் நிலையத்துக்கு எங்கு இடம் ஒதுக்கு வது என்பது தொடர்பாக சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் முடிவு செய்துள்ளது. இதற்கான புதிய வரைபடமும் தயாரிக்கப்பட்டுள்ளது.