districts

img

அண்ணாமலைச்சேரி கிராமத்தில் எம்எல்ஏ ஆய்வு

திருவள்ளூர், ஜூன் 20- அண்ணாமலைச்சேரி கிராமத்தில் கிராம  மக்களின் கோரிக்கையை ஏற்று நீண்டகால மாக சீரமைக்கப்படமால் இருந்த சாலை களை, கழிவுநீர் கால்வாய்களை பொன்னேரி  எம்.எல்.ஏ நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தொகுதிக்குட்பட்ட அண்ணாமலைச்சேரி கிராமத்தில் நீண்ட நாட்களாக நீண்டகால மாக சீரமைக்கப்படமால் இருந்த சாலை களை, கழிவுநீர் கால்வாய்களை சீரமைத்து தரக் கோரி பொன்னேரி சட்டமன்ற உறுப்பி னர் துரை.சந்திரசேகரிடம் கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர். இதையொட்டி ஞாயிறன்று  (ஜுன் 20)  அண்ணாமலைச்சேரி கிராமத்திற்கு சட்ட மன்ற உறுப்பினர் நேரில் சென்று ஆய்வு  செய்து பொது மக்களிடம் குறைகளைக்  கேட்டறிந்தார். பின்னர் தெருக்களை பார்வை யிட்டு சாலைகள் அமைப்பதற்கும், கழிவு நீரை  முறையாக வெளியேற்றுவதற்கும் அதிகாரி களுடன் ஆலோசனை நடத்தினார். அதேபோல் பொன்னேரியில் இருந்து புதுச்சேரி மேடு வழியாக அண்ணாமலை சேரிக்கு இயக்கப்பட்ட பேருந்துகளை மீண்டும் இயக்குவது குறித்தும் ஆலோ சனை நடத்தினார். இந்த ஆய்வின் போது திமுக நிர்வாகி கள் சுகுமாறன், வல்லூர் எம்.எஸ்.கே. ரமேஷ்ராஜ் ஆகியோர் உடன் இருந்தனர்.