விழுப்புரம்,ஜூன் 22- பாலியல் வன்கொடுமைகளை தடுத்து நிறுத்த வேண்டும் என்று அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. அனைத்திந்திய ஜனனாயக மாதர் சங்கத்தின் விழுப்புரம் கண்டாச்சிபுரம் வட்ட 12 ஆவது மாநாட்டில் மாநில துணைச் செயலாளர் எஸ்.கீதா, மாவட்டச் செயலாளர் எஸ்.சித்தரா, வட்டச் செயலாளர் வி.உமாமகேஸ்வரி உட்பட பலர் கலந்து கொண்டனர். இம் மாநாட்டில் பெட்ரோல், டீசல் ,கேஸ், பருப்பு, சமையல் எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும்,100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ் தொடர்ந்து வேலை வழங்க வேண்டும். அதிகரிக்கும் பெண் கருக்கொலை, கருமுட்டை விநியோகத்தை தடுத்து நிறுத்த வேண்டும், முதியோர் ஓய்வூதியம், விதவை உதவித் தொகை அனைவருக்கும் வழங்க வேண்டும்,பெண்களுக்கான திருமண உதவித்தொகை, தாலிக்கு தங்கம் திட்டம் மீண்டும் அமல்படுத்த வேண்டும். தேர்வு செய்யப்பட்டு உள்ளாட்சி மன்ற பெண் பிரதிநிதிகள் மற்றும் உறவினர்கள் தலையீடு இன்றி சுதந்திரமாக தன்னிச்சையாக செயல்படுத்துவதை உறுதிப்படுத்த வேண்டும், கண்டாச்சிபுரத்தில் மகளிர் அரசு அறிவியல் கல்லூரி அமைக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. வட்டத் தலைவராக இ.பிரேமா, வட்டச் செயலாளராக எஸ்.காஞ்சனா, பொருளாளர் டி.அமலோற்பவ மேரி ஆகியோர் புதிய நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்டனர்.