districts

img

கூட்டுறவு கடன் சங்கத்தில் பணம் கையாடல்: எஸ்பியிடம் புகார்

விழுப்புரம், டிச. 4- விழுப்புரம் மாவட்டம் விக்கிர வாண்டி வட்டத்திற்குட்பட்ட தெ.புதுப்பாளையம் பகுதியைச் சேர்ந்த வள்ளி, வீரம்மாள், சாந்தி, சந்திரா, தண்டபாணி, விநாயகம், வெங்கடேசன் ஆகியோர் அன்மை யில் மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவல கங்களில் மனு அளித்தனர். அந்த மனுவில், நாங்கள் 7 பேரும் சின்னதச்சூர் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தில் எங்களது கணக்கில் வரவு வைப்பதற்காக அங்கு பணிபுரியும் ஒருவர் மூலம் பணம் செலுத்தினோம். நாங்கள் செலுத்திய மொத்த தொகை ரூ.14 லட்சத்து 68 ஆயிரமாகும். இதற்கான ரசீது எங்களிடம் உள்ளது. இந்நிலையில் எங்களது கணக்கிலுள்ள தொகையிலிருந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு பணம் எடுக்கச் சென்றபோது, உங்களது கணக்கில் பணம் இல்லை என அங்கிருந்த அதிகாரி தெரிவித்தார். மேலும் இதுதொடர்பாக கணக்காளரிடம் கேளுங்கள் எனக் கூறிவிட்டார். எனவே கூட்டுறவு கடன் சங்கத்தில் நாங்கள் செலுத்திய பணத்தை கையாடல் செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், எங்கள் பணத்தை பெற்றுத்தர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் கூறியுள்ளனர்.