சென்னை, அக்.6- சென்னை வடபழனி, சிம்ஸ் மருத்துவமனையில் வெர்சியஸ் ரோபாட்டிக் அறுவை சிகிச்சை முறையை மாநில சுகாதாரத் துறை அமைச்சர் மா. சுப் பிரமணியன் புதன்கிழமை (அக்.4) தொடங்கி வைத்தார். குறைந்த அளவு ஊடு ருவக்கூடிய ரோபாட்டிக் அறுவை சிகிச்சை முறையை வழங்குவதன் மூலம் ரத்த கசிவு பெரும் பாலும் இருக்காது. மேலும் துல்லியமான இந்த அறுவை சிகிச்சை நடைபெறும் என்பதால் நோயாளிகள் விரைவில் குணமடைய வாய்ப்புண்டு. இந்த சிகிச்சை முறையை தொடங்கி வைத்துப்பேசி அமைச்சர் இந்தப் புதிய ரோபாட்டிக் அறுவை சிகிச்சை முறை மருத்துவக் குழுவினருக்கும் நோயாளிகளுக்கும் மிகப் பெரிய வரப்பிரசாதம் என்றார். அதிக செலவில்லாத, கட்டுப்படியாகக்கூடிய கட்டணத்தில் தொடங்கி, குறைந்த வலி – அதிகம் ஊடுருவாத தன்மை, தழும் புகள் மற்றும் ரத்த இழப்பும் குறைவு, நோயாளிகள் விரைவாக குணமடையும் வசதி, குறைந்த நாள் மருத்துவமனையில் தங்கு தல் போன்ற நன்மைகளின் மூலம் அவர்களுடைய வழக்கமான வேலைகளை மீண்டும் தொடங்க பாரம் பரிய அறுவை சிகிச்சை முறைகளைவிட இந்தப் புதிய ரோபாட்டிக் அறுவை சிகிச்சை நன்கு பயன்படும் என்றும் அவர் கூறினார். நிகழ்ச்சிக்கு எஸ்.ஆர்.எம். குழுமத்தின் தலை வர் டாக்டர் ரவி பச்சமுத்து முன்னிலை வகித்தார். ரோபாட்டிக் அறுவை சிகிச் சையின் நன்மைகள் பற்றி சிம்ஸ் மருத்துவமனையின் இயக்குநரும், இரைப்பை குடலியல் அறுவைசிகிச்சை நிபுணருமான டாக்டர் பட்டா ராதாகிருஷ்ணன் விளக்கி னார். “அடுத்த தலைமுறை அறுவை சிகிச்சை ரோபாட் என்பது செயற்கை நுண்ண றிவு - இயந்திர கற்றல் மூலம் செயல்படுகிறது. இது பாரம்பரிய அறுவை சிகிச்சைகளில் பெரிய அள வில் உடலைக் கீறுவது போல் இல்லாமல், ஒன்று அல்லது சில சிறிய கீறல்கள் மூலம் அறுவை சிகிச்சை செய்யும் வசதியை அளிக்கி றது. இந்த அமைப்பு மிகவும் பெரிதாக்கப்பட்ட 3D உயர்நிலை பார்வையை வழங்குகிறது.