கூகுள் மேப்ஸ்: லொக்கேஷன் ஹிஸ்டரி அம்சத்தில் விரைவில் மாற்றம்!
கூகுள் மேப்ஸில் (Google Maps) உள்ள லொக்கேஷன் ஹிஸ்டரி (Location History) அம்சத்தில் விரைவில் மாற்றம் கொண்டு வரவுள்ள தாக கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது. உங்கள் மொபைலில் உள்ள கூகுள் கணக்கில் (Account) நீங்கள் செல்லும் அனைத்து இடங்கள் மற்றும் வழிகளின் விவரங்களைச் சேமித்து வைக்கும் அம்சத்தையே ‘லொக்கேஷன் ஹிஸ்டரி’ என்று அழைக்கிறோம். லொக்கேஷன் ஹிஸ்டரி மூலம் பெறப்படும் தரவுகள் கூகுள் நிறுவனத்தின் கிள வுடில் (Cloud) சேமிக்கப்படுகின்றன. இது பயனர்களின் தனியுரிமையைப் பாதுகாக்கக்கூடும் என்பதால், லொக்கேஷன் ஹிஸ்டரி தரவுகளை கிளவுடில் சேமிப்பதற்கு பதிலாக பயனர்களின் மொபைல் போனிலேயே சேமிக்கும் வகையில் விரைவில் மாற்றம் கொண்டு வரவுள்ளதாக கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த மாற்றத்தின் மூலம் உங்கள் மொபைலில் உள்ள கூகுள் மேப்ஸ் செயலியில் மட்டுமே நீங்கள் சென்ற இடங்களின் தரவுகளை பார்க்க முடியும்; வெப் ப்ரவுசரில் உள்ள கூகுள் மேப்ஸில் இந்த தரவுகளை பார்க்க முடியாது. மேலும், ‘லொக்கேஷன் ஹிஸ்டரி’ என்ற பெயரை டைம்லைன் (Timeline) என்று மாற்ற உள்ளதாகவும், டைம்லைன் தரவுகளை என்ட்-டு-எண்ட் என்கிரிப்ட் (End-to-end Encrypt) செய்யப்பட்டு கிளவுட் சேமிக்கும் வசதி யும் வழங்கப்படும் எனவும் அந்நிறுவனம் தெரிவித்துள் ளது. இந்தாண்டு டிசம்பர் 1-ஆம் தேதிக்குள் அனைத்து பயனர்களுக்கும் இந்த அம்சம் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வாட்ஸ்அப் பிஸ்னஸ் கணக்குகளுக்கு விரைவில் மெட்டா வெரிஃபைடு அம்சம்!
இந்தியா மற்றும் சில நாடுகளுக்கு வாட்ஸ்அப் பிஸ்னஸ் (Whatsapp Business) கணக்குகளுக்கு விரைவில் மெட்டா வெரிஃபைடு (Meta Verified) பேட்ச் வழங்கப்படும் என்று மெட்டா நிறு வனம் அறி வித்துள்ளது. பேஸ்புக் மற் றும் இன்ஸ்டாகிரா மில் இருப்பது போல மெட்டா வெரிஃபைடு திட்ட ங்களை சப்ஸ்கிரைப் (Subscribe) செய்யும் வணிகர்களின் வாட்ஸ்அப் கணக்குகளுக்கும் மெட்டா வெரிஃபைடு பேட்ச் வழங்கப்படும் என்று மெட்டா நிறுவனம் அறிவித்துள்ளது. இதில் பிஸ்னஸ் கணக்குகளின் வாட்ஸ்அப் பெயருக்கு அருகில் “ப்ளூ டிக்” மற்றும் கணக்கு குறித்த தகவல்கள் போன்றவை காண்பிக்கப்படும். இதன் மூலம் மெட்டா வில் தகவல்களை பதிவு செய்துள்ள பிஸ்னஸ் கணக்குகளை மற்ற பயனர்கள் அறிந்து கொள்ளலாம். இந்த அம்சத்தை இந்தியா, பிரேசில், இந்தோனேசியா, கொலம்பியா ஆகிய நாடுகளில் விரைவில் அறிமுகம் செய்ய உள்ளதாக மெட்டா நிறுவனம் அறிவித் துள்ளது.
இன்ஸ்டாகிராமில் ‘லிமிட் இன்டராக்ஷன்ஸ்’ அம்சம்!
இன்ஸ்டாகிராமில் நெருங்கிய நண்பர்கள் தவிர்த்து மற்றவர்களிடத்தில் இருந்து வரும் மெசேஜ் (Direct Message), கமெண்ட் (Comment) மற்றும் டேக் (Tag) உள்ளிவைகளை கட்டுப்படுத்தும் வகையில் ‘லிமிட் இன்டராக்ஷன்ஸ்’ (Limit Interactions) அம்சத்தை அனைத்து பயனர்களு க்கும் மெட்டா நிறுவனம் வழங்கியுள்ளது. இந்த அம்சம் மூலம் இன்ஸ்டாகிராமில் நம்மை கேலி செய்தும், அச்சுறுத்தியும் மற்ற வர்கள் அனுப்பும் மெசேஜ், டேக் மற்றும் கமெண்ட்களை தடுக்க முடியும். இந்த அம்சம் கிரியேட்டர்களுக்கு (Creators) கடந்த 2021-ஆம் ஆண்டு வழங்கப்பட்டது. தற்போது இந்த அம்சம் அனைத்து பயனர்களுக்கும் மெட்டா நிறுவனம் வழங்கியுள்ளது. லிமிட் இன்டராக்ஷன்ஸ் அம்சத்தை பயன்படுத்த சில settings-ஐ மேற்கொள்ள வேண்டும்: 1) Settings and Activity Menu-வுக்கு சென்று Limit Interactions ஆப்ஷனை கிளிக் செய்து ‘Turn Limits on’ செய்ய வேண்டும். 2) ‘What will be limited’, ‘Who will be limited’ மற்றும் ‘When we’ll remind you to turn this off’ போன்ற ஆப்ஷன்கள் காணப்படும். 3) ‘Who will be limited’ ஆப்ஷனை கிளிக் செய்து ‘Everyone but your Close Friends’ என்ற ஆப்ஷனை தேர்வு செய்தால் லிமிட் இன்டராக்ஷன்ஸ் அம்சத்தை பயன்படுத்த முடியும்.