districts

img

பொன்மலையில் மக்கள் சந்திப்பு இயக்கம் கே.பாலகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்

திருச்சிராப்பள்ளி, செப். 5 - கொரோனா பெருந்தொற்றிலிருந்து பாதுகாத்திட அனைவருக்கும் இலவச  தடுப்பூசி வழங்க வேண்டும். செங்கல்பட் டில் உள்ள பொதுத்துறை தடுப்பூசி தொழிற்சாலையை உடனே செயல்ப டுத்த வேண்டும். வங்கி, காப்பீடு போன்ற  பொதுத்துறைகளை பெருமுதலாளி களுக்கு தாரை வார்க்க கூடாது. கல்வியை வணிகமயமாக்கி புதிய கல்வி  கொள்கையை கைவிட வேண்டும். பாடத்திட்டத்தில் காவிமயமாக்குவதை நிறுத்தி, நீட் தேர்வில் தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும்.  பெண்கள் மீதான பாலியல் கொடு மைகளுக்கு முடிவு கட்ட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக் கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி சார்பில் ஒன்றிய மோடி அர சின் மீது மக்கள் விசாரணை மன்றத் தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யும்  இயக்கம் தமிழகம் முழுவதும் செப்டம் பர் 5 முதல் 15 ஆம் தேதி வரை நடை பெறுகிறது.  இந்த இயக்கத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செய லாளர் கே.பாலகிருஷ்ணன் ஞாயிறன்று திருச்சி பொன்மலை சந்தையில் தொ டங்கி வைத்து வியாபாரிகள் மற்றும் பொதுமக்களிடம் கோரிக்கை நோட்டீசை வழங்கினார். இதில் மாநகர்  மாவட்டச் செயலாளர் ராஜா, பொன் மலை பகுதிச் செயலாளர் கார்த்திகே யன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.