விழுப்புரம், ஜூலை 7- விழுப்புரம்-திருச்சி நெடுஞ்சாலையில் நான்குமுனை சந்திப்புக்கும் புதிய பேருந்து நிலையத்திற்கும் இடைப்பட்ட பகுதியில் முட்புதர்கள் அடர்ந்த காடுபோன்று உள்ளது. அப்பகுதி யில் சிறுத்தைப்புலி நட மாட்டம் இருப்பதாகவும், இதை சிலர் பார்த்ததாகவும் கூறப்பட்டது. இந்த தகவல் காட்டுத்தீ போல பர வியது. இதனால் மக்கள் பெரும் பீதியில் உறைந்தனர். இதனிடைய இந்த தகவல் சமூக வலை தளங்களிலும் வைரலானது. இதனைத் தொடர்ந்து, வனத்துறைக்கு தகவல் தெரி விக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள் கண்காணிப்பை தீவிரப்படுத்தினர். பிறகு செய்தியாளர்களை சந்தித்த வனத்துறை அதிகாரி கள்,“ பொதுமக்கள் அளித்த தக வலின்பேரில் தேடுதல் பணியை தொடர்ந்தோம். ஆனால், சிறுத்தைப்புலி நட மாட்டத்திற்கான எந்த தடயமும் இல்லை. சிறுத்தைப்புலி நட மாட்டம் இருப்பதாக நம்பத்தகுந்த தகவலும் இல்லை. இருந்தாலும் நாங்கள் கண்காணித்து வருகிறோம்” என்றனர்.