சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியத்தின் சார்பில் செங்கல்பட்டு மாவட்டம் நெம்மேலியில் நடைபெற்று வரும் 150 எம்.எல்.டி. திறன் கொண்ட கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தின் கட்டுமானப் பணிகளை நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு சனிக்கிழமை (ஜூலை 17) ஆய்வு செய்தார். உடன் மேலாண்மை இயக்குநர் சி.விஜயராஜ்குமார், செயல் இயக்குநர் பி.ஆகாஷ் ஆகியோர் இருந்தனர்.