districts

விழுப்புரம் மாவட்டத்தில் 72.39 விழுக்காடு வாக்குகள் பதிவு

விழுப்புரம், பிப்.20- விழுப்புரம் மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெற்ற நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் 72.39 விழுக்காடு வாக்குகள் பதிவாகியுள்ளன. மாவட்டத்தில் விழுப்புரம், திண்டிவனம், கோட்டக்குப்பம் ஆகிய 3 நகராட்சிகள், வளவனூர், விக்கிரவாண்டி, செஞ்சி, மரக்காணம், திருவெண்ணெய்நல்லூர், அரகண்டநல்லூர், அனந்தபுரம் ஆகிய 4 பேரூராட்சிகள் என மொத்தம் 7 நகர்ப்புற உள்ளாட்சிகளில் வார்டு உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தல் சனிக்கிழமை நடைபெற்றது. ஏற்கெனவே விக்கிரவாண்டி, அரகண்டநல்லூர் பேரூராட்சிகளில் தலா ஒரு திமுக வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதையடுத்து எஞ்சிய 208 பதவிகளுக்கு மொத்தம் 935 பேர் போட்டியிட்டனர். பிற உள்ளாட்சி பகுதிகளுடன் ஒப்பிடுகையில் விழுப்புரம் நகர பகுதியில் வாக்குப் பதிவு காலையில் மந்தமாகவே இருந்த நிலையில் பின்னர் சூடுபிடித்தது.   மாலையில் வாக்குப்பதிவு முடிந்தவுடன் வாக்குப் பதிவு இயந்திரங்கள் மூடி முத்திரையிடப்பட்டு, வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டுசெல்லப்பட்டன. விழுப்புரம் மாவட்டத்தில் தேர்தலில் சிறு சம்பவங்களைத் தவிர பெரிய அளவிலான அசம்பாவிதம் ஏதும் நடைபெறவில்லை என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். ஆய்வின்போது மாவட்ட எஸ்பி ந.ஸ்ரீநாதா, திண்டிவனம் சாராட்சியர் எம்.பி.அமித், உதவி காவல் கண்காணிப்பாளர் அபிஷேக் குப்தா, மகளிர் திட்ட அலுவலர் பூ.காஞ்சனா, விழுப்புரம் நகராட்சி ஆணையர் போ.வி.சுரேந்திரஷா உள்ளிட்டோர் உடனிருந்தனர். 72 சதவீத வாக்குப் விழுப்புரம் மாவட்டத்தில் 7 உள்ளாட்சி அமைப்புகளிலும் மாலை 7 மணி நிலவரப்படி 72.39 சதவீத வாக்குகள் பதிவானதாக தெரிவிக்கப்பட்டது. நகராட்சிகளில் பதிவான வாக்குகள்  (விழுக்காடு): விழுப்புரம் 65.46, திண்டிவனம் 75.70, கோட்டக்குப்பம் 75.71, பேரூராட்சிகளில் பதிவான வாக்குகள்(சதவீதம்), வளவனூர் 74.96, விக்கிரவாண்டி83.98, செஞ்சி 74.36, மரக்காணம் 85.62, திரு வெண்ணெய்  ல்லூர் 81.95, அரகண்டநல்லூர் 82.-01, அனந்தபுரம் 82.67 மொத்தம் 72.39.