சென்னை, பிப். 3 - பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் கழிவு நீர், குப்பை கொட்டக் கூடாது என்று தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தர விட்டுள்ளது. பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் கட்டிட கழிவுகள் கொட்டப்படுவதாக 2016 ஆம் ஆண்டு செய்தி வெளி யானது. அதனடிப்படையில் தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம், தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. பொதுப்பணித் துறை சார்பில் சதுப்பு நிலத் தில் சாலை அமைப்பதற்கு தடை விதித்தது. இந்த வழக்கு நிலுவை யில் உள்ள நிலையில், பள்ளிக்கரணை சதுப்பு நிலம் சென்னை நகரின் குப்பை கிடங்காக மாற்றப் பட்டுவிட்டது. ஏற்கனவே, 250 ஏக்கர் சதுப்பு நிலத்தில் குப்பைகள் கொட்டப்பட் டுள்ளது. குப்பைகள் எரிக்கப் படுவதால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது. எனவே, இதை தடுக்க வேண்டும் என்று மேகநாதன் என்பவர் வழக்கு தொடர்ந்தார். இந்த இரு வழக்குகளை யும் விசாரித்த தீர்ப்பாயத் தின் நீதித்துறை உறுப்பினர் ராமகிருஷ்ணன், நிபுணத் துவ உறுப்பினர் சத்யகோ பால் அடங்கிய அமர்வு, பள்ளிக்கரணை சதுப்பு நிலம் விடுதலைக்கு முன்பு எவ்வளவு பரப்பளவில் இருந்தது என்பது குறித்து விரிவாக ஆய்வு நடத்தி, அதில் உள்ள ஆக்கிரமிப்புக் களை அகற்ற வேண்டும்.
மாநில சுற்றுச்சூழல் துறை செயலாளர் தலைமை யில் உயர்மட்டக் குழுவை அமைத்து, பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை பாதுகாக்கப் பட்ட சதுப்பு நிலமாக அறிவிக்க வேண்டும். சதுப்பு நிலத்தை பாதுகாப்பதற்கான செயல்திட்டத்தை வகுக்க வேண்டும். பெருங்குடி குப்பை கிடங்கை பழைய நிலைக்கு மீட்டெடுத்து, வனத் துறையிடம் ஒப்படைப் பது குறித்து சென்னை மாநகராட்சி பரிசீலிக்க வேண்டும். சென்னை மாநகராட்சி யும், சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர கற்று வாரியமும், பள்ளிக்க ரணை சதுப்பு நிலத்தில் கழிவுநீரை கலக்கக் கூடாது. குப்பைகளை கொட்டக் கூடாது. தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம், சதுப்பு நில நீரை சோதித்து, அது மாசடைந்திருந்தால், கழிவுநீரை சதுப்பு நிலத்தில் கலக்கச் செய்தவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும். சதுப்பு நிலத்தை பாதுகாக்க எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து அவ்வப்போது அரசு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை தீர்ப்பாயம் முடித்து வைத்தது.