சென்னை,ஏப்.9- உலக ஓமியோபதி நாளையொட்டி கோபிகர் ஓமியோ அறக்கட்டளை சந்திர சேகரன் ஃபவுண்டேஷன் மற்றும் தக்கர் பாபா வித்யாலயா சமிதி சார்பில் சென்னையில் ஞாயிறன்று (ஏப். 9) நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சியில் மூத்த மருத்து வர் கே.எஸ்.சீனிவாசனின் அனுபவத் திரட்டு நூல்களை முன்னாள் ஐஏஎஸ் அதி காரி டி.ராஜேந்திரன் வெளியிட்டார். கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்ட போது, சிகிச்சைக்கு மக்கள் பல லட்சம் ரூபாய் செலவு செய்த அதே வேளையில் மிக மிகக் குறைவான செல வில் ஓமியோபதி மருந்து கள் மூலம் சிகிச்சை பெற்றுக் குணமானோர் உண்டு. இன்னும் அதிக அள வில் இந்தச் சிகிச்சை முறை மக்கள் மத்தியில் பர வலாகச் செல்ல வேண்டும் என்று பேசிய ராஜேந்திரன்,கருத்தரிப்பு சிகிச்சைக்கு ஓமியோபதி மருத்துவ இலவச சேவை மையத்தையும் தொடங்கி வைத்தார். 94 வயது மூத்த மருத்து வர் கே.எஸ்.சீனிவாசன் பேசு கையில், மருத்துவர்களுக்கு வாசிப்பு அவசியம், மருந்து கள் தருமுன் மக்களைப் புரிந்து கொள்ள இந்த வாசிப்பு முக்கியம் என்று இளம் மருத்துவர்களுக்கு அறிவுறுத்தினார். தொடர்ந்து நடைபெற்ற கருத்தரங்கில் கருத்தரிப்பு சிகிச்சைகளில் ஓமியோபதி மருத்துவ முன்னெடுப்புகள் பற்றி மருத்துவர்கள் எஸ்.ஜெகதா, பி.வி.வெங்கட்ராமன் மற்றும் நோய் அறிகுறிகளில் உள்ள சவால்கள் பற்றி மருத்துவர் அசோகன் ஆகியோர் உரை யாற்றினார். நிறைவாக மருத்துவர் சந்தியா நன்றி கூறினார்.