districts

img

பொதுவாழ்விற்கு இலக்கணம் என்.சங்கரய்யா

தென்சென்னையில் நூற்றாண்டு விழாவை தொடங்கி வைத்து கே.பாலகிருஷ்ணன் பேச்சு

சென்னை, ஜூலை 16- பொதுவாழ்விற்கு இலக்கண மாக வாழ்ந்து வருபவர் என்.சங்க ரய்யா என்று மார்க்சிஸ்ட்  கம்யூ னிஸ்ட் கட்சியின மாநிலச் செயலா ளர் கே.பாலகிருஷ்ணன் கூறினார். விடுதலைப் போராட்ட வீரரும், இந்திய கம்யூனிச இயக்கத்தின் மூத்த தலைவருமான என்.சங்க ரய்யாவின் பிறந்தநாள் நூற்றாண்டு விழா விருகம்பாக்கம் பகுதியில் ஜூலை 14ந் தேதி நடைபெற்றது. விழாவின் துவக்கமாக எம்ஜிஆர் நகர் பகுதியில 100 மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. முதல்  மரக்கன்றை நட்டு விழாவை தொடங்கி வைத்து கே.பால கிருஷ்ணன் பேசியது வருமாறு: என்.சங்கரய்யா நூற்றாண்டு நிகழ்ச்சி சுற்றுச்சூழல் பாதுபாப்பு விழாவாக நடைபெறுகிறது. 1938ம் ஆண்டு ராஜாஜி முதலமைச்ச ராக இருந்தபோது, இந்தியை திணித்தார். இதை எதிர்த்து அவ ருக்கு முதன்முதலில் கருப்புகொடி  காட்டியதற்காக என்.சங்கரய்யா கைது செய்யப்பட்டார். அதில்  தொடங்கி அவரது அரசியல் வாழ்க் கையில்,  மொழி உரிமைக்காக, மொழி வளர்ச்சிக்காக, மொழிவழி மாநிலம் அமைய, விவசாயிகள் நலன் காக்க பல்வேறு போராட் டங்களுக்கு தலைமை தாங்கினர். 8 ஆண்டு சிறை, 3 ஆண்டு தலை மறைவு என 11 ஆண்டுகள் முடக்கி  வைக்கப்பட்டார்.

கம்யூனிஸ்ட்டு களை ஒடுக்க புனையப்பட்ட மதுரை சதி வழக்கிலும் சிறையில்  அடைக்கப்பட்டார். இப்படியாக சிறை, வழக்கு, வாய்தா போன்ற வற்றை எதிர்த்து உறுதியோடு அடக்குமுறைக்கு எதிராக  சமர்புரிந்தார். தமிழகத்தில் கம்யூ னிச இயக்கத்தை வளர்த்தெடுக்க அரும்பணியாற்றினார். அரசியல் எதிரிகள் கூட அவரது  அரசியல் நாணயத்தை, நேர் மையை கேள்வி எழுப்ப முடி யாது. அப்படிப்பட்ட அப்பற்ற தூய்  மையான அரசியல் வாழ்வு  வாழ்ந்தவர் அவர்.  ஒருபோதும்  அவர் பதவியை தேடி சென்ற தில்லை. அவரைத்தேடிதான் பதவி கள் வந்தன. இளைஞர்களுக்கும், அரசியல் கட்சிகளுக்கும் முன்னு தாரணமாக திகழ்கிறார். பட்டியலின மக்களுக்கு எதி ராக இழைக்கப்படும் கொடுமை களுக்கு எதிராக நின்றார். 75 வரு டங்களுக்கு முன்பே சாதி, மத மறுப்பு திருமணம் செய்து கொண்ட தோடு, தனது குடும்பத்தில் உள்ள  பெரும்பாலானோருக்கு அவ் வாறே செய்து வைத்தார். அவரது குடும்பத்தில் இல்லாத சாதிகளே இல்லை என்ற நிலை உள்ளது.

‘பிறவி கடமையை நிறைவேற்ற வேண்டுமென்றால் சாதிய ஆதிக்  கத்தை எதிர்த்து போராட வேண்டும்’  என்று அறிவுரையை ஏற்று செயல் படுவோம். இவ்வாறு அவர் பேசினார். பிரபாகரராஜா எம்எல்ஏ விருகம்பாக்கம் தொகுதி சட்ட மன்ற உறுப்பினர் பிரபாகரராஜா குறிப்பிடுகையில், “கலைஞர் கரு ணாநிதி ரசித்து பார்த்த தலைவர் களில் ஒருவர் என்.சங்கரய்யா. எல்  லோருக்கும் எல்லாமும் கிடைக்க வேண்டுமென்று விடுதலைப் போராட்டத்தில் ஏராளமான தியா கம் செய்தார். அவருடைய கொள்  கைகளை நிறைவேற்றும் இளை ஞர்களாக நாங்களும் இருப் போம்” என்றார். பகுதிக்குழு உறுப்பினர் எஸ்.கந்தன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் கட்சியின் தென் சென்னை மாவட்டச் செயலாளர் ஏ.பாக்கியம், பகுதிச் செயலாளர் சி.செங்கல்வராயன், மாவட்டச் செயலாளர்கள் பா.கருணாநிதி (சிபிஐ), ப.சுப்பிரமணியன் (மதி முக), வி.கே.ஆதவன் (விசிக), திமுக பகுதிச் செயலாளர் கே. கண்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். சிபிஎம் பகுதிக்குழு உறுப்பினர் டி.விஜயகுமாரி, கிளைச் செயலாளர் என்.அருள்  மற்றும் டி.ஆறுமுகம் உள்ளிட் டோர் பேசினர்.