சென்னை, பிப். 3 - நரிக்குறவர் பள்ளியை மீட்டு அரசே நடத்த வேண் டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்ளது. 1972ம் ஆண்டு சென்னை சைதாப்பேட்டையில் அரசு கொடுத்த நிலத்தில் நரிக் குறவர் பள்ளி உருவாக் கப்பட்டது. இந்த அரசு உதவி பெறும் திருவள்ளு வர் குருகுலம் நடுநிலைப் பள்ளியை, தென்னிந்திய பட்டியல் பழங்குடியினர் நல சங்கம் நிர்வகித்து வந்தது. தற்போது இந்தப் பள்ளி செயல்பாட்டில் இல்லை. பள்ளி நிர்வாகியும் காலமாகி விட்டார். அவரது வாரிசுகள் பள்ளி நிலத்தையும், அதனருகே உள்ள அரசு நிலத்தையும் சேர்த்து வணிக நோக்கத்திற்காக பயன்படுத்த முயற்சித்து வருகின்றனர். இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அண்ணாசாலையை யொட்டி அமைந்துள்ள இந்த நிலத்தை, நரிக்குற வர் மாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்காகவே அரசு வழங்கியது. அதற்கு மாறாக பள்ளி நிர்வாகம், நிலத்தை வியாபாரம் செய்ய முற்படு வது ஏற்றுக் கொள்ள இயலாது. எனவே, பள்ளியை அரசு கையகப்படுத்தி ஆதி திராவிடர் நலத்துறை மூலம் கல்வி பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும். பள்ளிக்கு அருகே உள்ள காலி இடத்தில், ஜோதியம் மாள் நகர் மக்கள் பயனடை யும் வகையில் சமூக நலக்கூடம், உடற்பயிற்சி கூடத்துடன் கூடிய விளை யாட்டு மைதானம் அமைக்க வேண்டுமென்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சைதாப்பேட்டை பகுதிச் செயலாளர் ஜி.வெங்க டேசன் விடுத்துள்ள அறிக் கையில் தெரிவித்துள்ளார்.