districts

img

நூலகம் கேட்டு ஆட்சியரிடம்  சிறுமி கோரிக்கை

விழுப்புரம், பிப்.27- விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் வட்டம், திருமலைப்பட்டு கிராமம், மாரி யம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த வி.வருனிதா (10) திங்களன்று(பிப்.27) ஆட்சியர் சி. பழனியிடம் மனு ஒன்றை அளித்தனர். அதில், திருமலைப்பட்டு ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் நான் 5 ஆம் வகுப்பு படித்து வருகிறேன். எங்கள் கிராமத்தைச் சேர்ந்த மாணவர்கள் பள்ளி நேரம் முடிந்து பின்னர், காட்டுக்குள் சென்று விளையாடுகின்றனர். அப்போது விஷ ஜந்துகள், காட்டு விலங்குகள் தாக்கும் அச்சம் உள்ளது. கிராமத்தில் நூலகம் இருந்தால் மாணவர்கள் அங்கு சென்று படிப்பர். இதனால் காட்டுக்கு சென்று விளையாடாத நிலை ஏற்படும். எனவே கிராமப்புற மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு எங்களுக்கு நூலகம் அமைத்துத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கோரிக்கை விடுத்திருந்தார். இதையடுத்து, உடனடியாக நூலகம் அமைக்க நடவடிக்கை எடுப்பதாகவும் ஆட்சியர் உறுதியளித்தார்.