தமிழகம் முழுக்க வரும் 10ஆம் தேதி முதல் 2 வாரங்களுக்கு பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளதால் கடலூர் மாவட்டம் திருப்பாதிரிப்புலியூர் பேருந்து நிலையம் அருகே டாஸ்மாக் மதுபான கடையில் மதுபானம் வாங்க மக்கள் குவிந்தனர். மது வாங்க வருவோர் மாஸ்க் அணியாமலும், தனிமனித இடைவெளியை கடைப்பிடிக்கமலும் குவிந்ததால் தொற்று பரவும் அபாயம் உள்ளது.