districts

img

கொரோனா வைரஸ் நோய் தொற்று பரவாமல் தடுப்பதற்காக தமிழ்நாடு முழுவதும் பிறப்பிக்கப்பட்டுள்ள பொதுமுடக்கம்

கொரோனா வைரஸ் நோய் தொற்று பரவாமல் தடுப்பதற்காக தமிழ்நாடு முழுவதும் பிறப்பிக்கப்பட்டுள்ள பொதுமுடக்க காலத்தில், திரைப்படத் தொழிலாளர்களின் நலனை கருத்தில் கொண்டு திரைப்படம் மற்றும் சின்னத்திரை படப்பிடிப்பு நடத்துவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தலைமையில் நடைபெற்றது. இதில் தமிழ்வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அரசு செயலாளர் மகேசன் காசிராஜன், செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநர் தெ.பாஸ்கரபாண்டியன், திரைப்பட நடிகர்கள் நாசர், ராஜேஷ், பூச்சி முருகன் உள்ளிட்ட துறை உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.