செங்கல்பட்டு, ஆக 3- கொரானாவால் பெற்றோரை இழந்த மாணவர்களுக்கு தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டது. தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியிர் கூட்டணி சார்பில் ஆகஸ்ட் 2 இயக்கநாள் நிகழ்ச்சி வட்டார கல்வி அலுவலகத்தில் வட்டத் தலைவர் வசுமதி தலைமையில் நடை பெற்றது. கிளை செயலாளா் இம்மானுவேல் வரவேற்றார். இதில் மாவட்டத் தலைவர் ஹென்சன், செயலாளர் சீனுவாசன், கூட்டுறுவு சங்கத் தின் தலைவர் சந்திரசேகரன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். முன்னதாக 17 தூய்மை நிலை பணியாளர்களுக்கு அரிசி உள்ளிட்ட மளிகைப் பொருட்களை வழங்கப்பட்டன. மேலும் கொரானாவால் பெற்றோரை இழந்த பல்வேறு பள்ளிகளைச் சார்ந்த நான்கு மாணவர்களுக்கு தலா 20 ஆயிரம் ரூபாய் வீதம் தபால் நிலையைத்தில் வைப்புத் தொகையாக செலுத்தப்பட்டு, அதற்கான ஆவணங்கள் மாணவர்களுக்கு வழங்கப் பட்டன. கிளை பொருளாளார் வினோத் குமார் நன்றி கூறினார்.