districts

வேலை வாங்கித் தருவதாக மோசடி: அரசுப் பள்ளி ஆசிரியர் பணியிடை நீக்கம்

விழுப்புரம், அக்.29- மின்வாரியத்தில் வேலை வாங்கித்தருவதாக கூறி ரூ.70 லட்சம் மோசடி செய்த அரசுப் பள்ளி ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். விழுப்புரம் மாவட்டம் திரு வெண்ணெய்நல்லூர் அருகே டி.புதுப்பாளையம் மேட்டுத்தெருவை சேர்ந்தவர் சங்கரன் (51). இவர் சித்த லிங்க மடம் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியராக பணி யாற்றி வருகிறார். மின்வாரி யத்தில் கேங்மேன், உதவி பொறி யாளர் வேலை வாங்கி தருவ தாகக் கூறி திருவெண்ணெய் நல்லூர் மற்றும் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த 40 பேரிடம் தலா ரூ.2 லட்சத்து 25 ஆயிரம் வீதமும், 18 பேரிடம் இருந்து தலா ரூ.25 ஆயிரம் வீதமும் என மொத்தம் ரூ.94 லட்சத்து 50 ஆயிரத்தை சங்கரன் பெற்றார். ஆனால் பல மாதங்களாகி யும் வேலை வாங்கித்தராமல் ஏமாற்றி வந்தார். இதனால் பணம் கொடுத்தவர்கள், சங்கரனிடம் பணத்தை திருப்பித்தரும்படி கேட்டனர். அதன் பின்னர் பல தவணைகளாக ரூ.24 லட்சத்து 50 ஆயிரத்தை மட்டும் கொடுத்துள்ளார். மீதமுள்ள ரூ.70 லட்சத்தை உரியவர்களுக்கு திருப்பித்த ராமல் ஏமாற்றி வந்துள்ளார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட வர்கள் அளித்த புகாரின்பேரில் மாவட்ட குற்றப்பிரிவு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து சங்கரனை கைது செய்த னர். இந்நிலையில் ஆசிரியர் சங்கரன் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுத்து அவரை பணி இடைநீக்கம் செய்து மாவட்ட முதன்மை கல்வி அதி காரி கிருஷ்ணப்பிரியா உத்தர விட்டுள்ளார்.