districts

கொரோனாவில் உயிரிழந்த மருத்துவர்கள் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்கக் கோரிக்கை

சென்னை, மார்ச் 22 தமிழக சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பட்ஜெட்டில் அரசு மருத்து வர்களின் ஊதியக் கோரிக்கையை நிறை வேற்றுவது குறித்து அறிவிப்பு வெளியி டப்படாதது அதிர்ச்சியளிப்பதாக உள்ளது என்று அரசு மருத்துவர்களுக்கான சட்டப்போ ராட்டக் குழு தலைவர், டாக்டர் எஸ். பெருமாள் பிள்ளை கூறியுள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கை யில் புதிய ஆட்சி அமைந்து 11 மாதங்கள் நிறைவடையும் நிலையிலும் கோரிக்கை நிறைவேறவில்லை.  கொரோனா பேரிடரில் பணியாற்றும் மருத்துவர்களுக்கு ராணுவ மரியாதை வழங்கப்படும் என அறிவித்தார்கள். ஆனால் உயிரிழந்த அரசு மருத்துவர்களின் குடும்பத்தி னருக்கு மாநில அரசிடமிருந்து இன்னமும்  நிவாரணம் எதுவும் தரப்படவில்லை. மருத்து வர் விவேகானந்தன் மனைவி கண்ணீர் விட்டு அழுத பிறகும், முதல்வருக்கு வேண்டு கோள் விடுத்த பிறகும் அரசு பணி வழங்கப்படவில்லை. அரசு மருத்து வர்களின் ஊதியக் கோரிக்கையை நிறை வேற்றுவது அரசுக்கு மிகவும் எளிதான காரியமே. அதாவது அரசுக்கு ஆண்டுக்கு கூடுதலாக 300 கோடி ரூபாய் மட்டுமே தேவைப்படுகிறது. நாட்டிலேயே தமிழகத்தில் ஊதியக் கோரிக்கைக்காக மருத்துவர் ஒருவர் உயி ரையே தியாகம் செய்த பிறகும், இரண்டு ஆண்டுகள் கடந்த பிறகும் அரசு பிடிவாத மாக இருப்பது 18 ஆயிரம் அரசு மருத்து வர்களுக்கும் மன வேதனையை ஏற்படுத் துகிறது. அரசு மருத்துவர்களுக்கு டாக்டர் கலைஞர் கொடுத்த அரசாணைப்படி 12 ஆண்டுகளில் ஊதியப்பட்டை நான்கு வழங்க ப்படும் என்ற வரலாற்று சிறப்புமிக்க அறி விப்பை இந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் வெளியிட வேண்டும் என கேட்டுக் கொள்வ தாக அவர் கூறியுள்ளார்.