பெட்ரோல், டீசல், சமையல் கேஸ் சிலிண்டர் விலை உயர்வை ஒன்றிய அரசு கட்டுப்படுத்த வலியுறுத்தி அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பில் புதுச்சேரி லாஸ்பேட்டை உழவர்சந்தை எதிரில் உழவர்கரை நகரக் குழு தலைவர் பெரியநாயகி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பிரதேச தலைவர் சந்திரா, செயலாளர் சத்தியா, நிர்வாகிகள் இளவரசி, முனியம்மாள் சுகுணா உள்ளிட்ட பலர் கொண்டு கேஸ் சிலிண்டருக்கு மாலை அணிவித்து, விறகு அடுப்பு வைத்து சமைத்து தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர்.