districts

கண்டலேறு அணையை திறக்க முடிவு பூண்டி ஏரியில் ஆந்திர அதிகாரிகள் ஆய்வு

ஊத்துக்கோட்டை, நவ.4-  சென்னைக்கு குடிநீர் வழங்கும் பிரதான  ஏரிகளில் ஒன்று பூண்டி ஏரி. இந்த ஏரியில் மழைநீர் மற்றும் கிருஷ்ணா நதி நீர் பங்கீடு திட்டத்தின்படி ஆந்திரா மாநிலம் நெல்லூர் அருகே உள்ள கண்டலேறு அணையில் இருந்து திறந்துவிடப்படும் தண்ணீரை சேமித்து வைத்து தேவைப்படும்போது புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு திறந்து விடப்படுவது நடைமுறையாகும். இந்த நிலையில் 68 டி.எம்.சி. கொள்ள ளவு கொண்ட கண்டலேறு அணையில் தற்போது 53. 27 டி. எம்.சி. தண்ணீர் இருப்பு  உள்ளது. தொடர்ந்து நீர் வரத்தால் கண்ட லேறு அணையின் நீர் மட்டம் உயர்ந்து வருவதால் பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறந்து வர ஆந்திர அதிகாரிகள் திட்டமிட்டு உள்ள னர். எனினும் தற்போது தமிழகத்தில் பலத்த  மழை கொட்டி வருவதால் கிருஷ்ணா தண்ணீர் திறப்பு குறித்து ஆந்திர மாநில  பொதுப்பணித்துறை உதவி செயற்பொறி யாளர் ஒபுல தாஸ், உதவி பொறியாளர்கள் சந்திர மோகன், பெஞ்சலய்யா ஆகியோர் பூண்டி ஏரியை பார்வையிட்டு ஆய்வு செய்த னர். அப்போது அதிகாரிகள் கூறும்போது, ஆந்திராவில் பெய்த பலத்த மழைக்கு நீர்வரத்து அதிகமாகியதால் கண்டலேறு அணை நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. தற்போது 53.27 டி. எம். சி. தண்ணீர் இருப்பு உள்ளது. தமிழக அரசு கேட்டுக் கொண்டால் கண்ட லேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறந்து விட தயாராக உள்ளோம் என்றனர். பூண்டி ஏரியில் மதகு கிணறு கிணறுகள் அமைக்கும் பணிகள், கிருஷ்ணா நதி கால்வாய் சீரமைப்பு பணிகள் முடியும் தருவாயில் உள்ளதாகவும், இப்பணிகள் முடிவடைந்த பிறகு கண்டலேறு அணையில் இருந்து தண்ணீர் பெற திட்டமிட்டுள்ளதாக தமிழக பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் ரமேஷ் தெரிவித்தார். அப்போது உதவி பொறியாளர்கள் பழனிகுமார், சதீஷ்குமார் ஆகியோர் உடன் இருந்தனர். பூண்டி ஏரியின் உயரம் 35 அடி ஆகும். இதில் 3,231  டி.எம்.சி. தண்ணீரை சேமித்து வைக்கலாம். தற்போது ஏரியின் நீர்மட்டம் 24.90 அடியாக வும், 832 மில்லியன் கன அடி தண்ணீரும் இருப்பு உள்ளது. பூண்டி ஏரியில் இருந்து  சென்னை குடிநீர் வாரியத்துக்கு  38 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.