districts

img

காஞ்சி மீன் மார்க்கெட்டில் குவியும் மக்கள்: கொரோனா பரவும் அபாயம்

காஞ்சிபுரம், ஏப். 19- காஞ்சிபுரம் மீன் மார்க்கெட்டில் மீன் வாங்க  தனிமனித இடைவெளியின்றி மக்கள் குவிந்த னர். இதனால் கொரோனா வைரஸ் தொற்று  மேலும் பரவ வாய்ப்பு உள்ளது. காஞ்சிபுரம் பெருநகராட்சி பகுதியில்  உள்ள பொன்னேரிக்கரை மீன் மார்க்கெட்டில்  வார விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை யன்று (ஏப். 18)அசைவப் பிரியர்கள் ஏராள மானோர் தங்களுக்குத் தேவையான மீன், நண்டு, கறி போன்றவகைகளை வாங்கிச் செல்ல ஒரே நேரத்தில் குவிந்தனர். நகராட்சி ஊழியர்கள்  பொதுமக்களுக்கு தேவையான கிருமி நாசினி திரவம், முகக்கவ சம் வழங்கி மார்கெட்டிற்குள் அனுமதித்தா லும் ஒரே நேரத்தில் ஏராளமானோர் கூடுவ தால் தனிமனித இடைவெளியின்றி காணப்படு கிறது. மீன்பிடி தடைக்காலம் உள்ள நிலையில் காஞ்சிபுரம் மீன் மார்க்கெட்டிற்கு மீன் வரத்து  குறைந்துள்ளதால் மீன்களின் விலை உயர்ந்துள்ளது. இருந்த போதிலும் ஏராள மானோர் மீன் வாங்க குவிந்தனர். நகராட்சி பகுதிகளில் ஏற்கனவே கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிக ரித்து வருகிறது. 20க்கும் மேற்பட்ட பகுதி கள் கட்டுப்பாட்டு பகுதிகளாக அறிவிக்கப் பட்டுள்ளன.  இந்நிலையில் பொதுமக்கள் தனி மனித இடைவெளியை பின்பற்றாமல் மீன்  மார்க்கெட்டில் குவிவதால் மேலும்  கொரோனா தொற்று வேகமாக பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதைத் தவிர்க்க ஞாயிறு போன்ற விடு முறை நாட்களில் மீன் மார்க்கெட்டிற்கு கட்டாய விடுமுறை அளித்தால் கொரானா தொற்று பரவலை குறைக்கலாம் என அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.