districts

சென்னையில் ரூ.4.12 கோடி அபராதம் வசூல்

சென்னை, ஏப். 24- கொரோனா தடுப்பு பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றாத நிறுவனங்கள், கடைகள் மற்றும் தனி நபர்களிடமிருந்து ரூ.4.12 கோடி அபராதத் தொகை வசூலிக்கப்பட்டுள்ளது. பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதி களில் அரசின் கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு  மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் அறிவிக்கப்பட்டுள்  ளது. அதன்படி, முகக்கவசம் அணிதல், இரண்டு மீட்டர்  இடைவெளியுடன் தனிமனித இடைவெளியை கடைப்  பிடித்தல், அவ்வப்பொழுது கைகளை சோப்பு கரை சல் மற்றும் கிரிமி நாசினி கொண்டு சுத்தப்படுத்திக்  கொள்ளுதல், கடைகள் மற்றும் வணிக வளாகங்க ளின் வாயிலில் கிருமி நாசினி திரவங்கள் வைத்தல்  போன்ற வழிமுறைகளை கட்டாயம் பின்பற்ற அறி வுறுத்தப்படுகிறது. இவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் அதி காரிகள் கண்காணித்து அபராதம் வசூலித்து வருகின்ற னர். இதன்படி தொற்று தடுப்பு மற்றும் பாதுகாப்பு வழி முறைகளை பின்பற்றாத நிறுவனங்கள், கடைகள், உணவகங்கள் மற்றும் முகக்கவசம் அணியாத தனி நபர்களிடமிருந்து ஏப்.22 வரை ரூ.4.12 கோடி அபராத மாக வசூலிக்கப்பட்டுள்ளது.