districts

img

இடிந்த சுற்றுச்சுவரை சீரமைத்திடுக: மாநகராட்சியிடம் சிபிஎம் மனு

சென்னை, பிப். 17- ஆர்.கே. நகர் 38ஆவது வட்டத்திற்குட்பட்ட சஞ்சீவ் காந்தி நகர் 4ஆவது தெருவில் சுமார் 100 குடும்பங்கள் வசிக்கின்றன.  குடியிருப்புகளின் அருகில் பக்கிங்காம் கால்வாய் உள்ளது. இந்த கால்வாயையும், அதன் அருகில் செல்லும் சாலையையும் யாரும் அக்கிரமித்து விடக்கூடாது என்பதற்காக குடியிருப்பை ஒட்டி பொதுப்பணித்துறை சார்பில் சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு சுற்றுச்சுவர் இடிந்து விழுந்துள்ளது. சுற்றுச்சுவர் சீரமைக்கப்படாததால், அதன்மேல் அமர்ந்து சிலர் மது அருந்துவதாகவும் சிலர் தகராறில் ஈடுபடுவதாகவும் கூறப்படுகிறது. இத்தகைய செயல் அங்கு வசிப்பவர்களுக்கு பெரும் இடையூறாக உள்ளதோடு, மக்கள் அச்சத்துடன் வாழும் சூழ்நிலையும் உள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நேதாஜி நகர் கிளை சார்பில் உடனடியாக சுற்றுச்சுவரை சீரமைக்கக் கோரி மாநகராட்சி உதவி பொறியாளரிடம் மனு அளிக்கப்பட்டது  இதில் பகுதிச் செயலாளர் ரவிக்குமார், கார்த்திக், திருமுருகன், ராஜா உள்ளிட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.