districts

img

சமையல் எரிவாயு “பாதுகாப்பான பயன்பாடு” குறித்த விழிப்புணர்வு

சென்னை,  ஜூலை 9- 75வது ஆண்டு சுதந்திரக் கொண்டாட்டத்தின் ஒரு  பகுதியாக இந்தியன் ஆயில் நிறுவனத்தின் சார்பில் சென்னையில் வியாழனன்று (ஜூலை 7) “சமையல் எரிவாயு - பாதுகாப்பான பயன்பாடு” குறித்த விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.  நுங்கம்பாக்கம் வருமான வரி அலுவலக வளாகத்தில் ('ஆயக்கர் பவன்) நடைபெற்ற இந்த முகாமை ஐஓசி சமையல்  எரிவாயு விற்பனை பிரிவு பொதுமேலாளர் கே.எஸ். சங்கர்  தொடங்கிவைத்தார். சென்னை, வருமான வரி தலைமை ஆணையர் ெஜயந்தி கிருஷ்ணன் முன்னிலை வகித்தார்.  சமையல் எரிவாயு பயன்பாடு குறித்த பல்வேறு பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து நிகழ்ச்சியில் விளக்கப்பட்டது இதில்  வருமான வரித்துறை அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.