சென்னை, நவ. 12- மழைநீர் கால்வாய் பணி யின் போது சுற்றுச்சுவர் இடிந்தவர்களுக்கு, கேபிள் அறுந்து போனவர்களுக்கு 4ஆவது வார்டில் முழு இழப்பீடுகள் வழங்கப் பட்டுள்ளன. சென்னை மாநகராட்சி யில் மழைநீர் கால்வாய் பணிகள் நடைபெற்று வரு கின்றன. கால்வாய் பணிகள் நடைபெறும் போது சில வீடுகளின் சுற்று சுவர்கள் இடிந்து விழுந்தன. சில வீடுகளின் மின் இணைப்பு கேபிள்கள் அறுந்தன. குடிநீர், கழிவுநீர் குழாய்கள் உடைக்கப்பட்டன. இவ்வாறு பாதிக்கப் பட்டால், அவர்களுக்கு சுற்றுச் சுவர் கட்டித் தரவும், புதிய கேபிள்கள் வாங்கி கொடுக்கவும், குடிநீர், கழிவு நீர் இனைப்புகளை மீண்டும் சீரமைத்து கொடுக்கவும் வேண்டும் என ஒப்பந்தாரர்களுக்கு மாநக ராட்சி ஒப்பந்தத்தில் வழி காட்டப்பட்டுள்ளது. ஆனால் பெரும் பான்மையான இடங்களில் இதை நடைமுறைப் படுத்துவதில்லை. 4ஆவது வார்டு மாமன்ற உறுப்பினர் ஆர்.ஜெயராமன் தொடர் முயற்சியால், கடந்த 2 ஆண்டுகளில் சுமார் 2,000 மீட்டர் மின் கேபிள்கள், சுற்றுச் சுவர் இடிந்தவர்களுக்கு செங்கல், மண், சிமெண்ட் ஆகியவை சுமார் 30 லட்சம் மதிப்பீட்டில் பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அண்மை யில் வி.பி. நகர், திருவீதி யம்மன் நகரில் சுற்றுச்சுவர் இடிந்தவர்களுக்கு செங்கல், மண் வழங்கப்பட்டது. மாகாளியம்மன் கோயில் தெரு, கன்னியலால் லேஅவுட், பிருந்தாவன் நகர் பகுதிகளில் சேத மடைந்த 250 மீட்டர் மின் கேபிள் வாங்கிக் கொடுக்கப்பட்டது. மாகாளியம்மன் நகர் தலைவர் ராம்குமார், கன்னியலால் லேஅவுட் தலைவர் சடகோபன், பிருந்தாவன் நகர் தலைவர் ஆறுமுகம் முன்னிலையில் மாமன்ற உறுப்பினர் ஆர்.ஜெயராமன் வழங்கினார். ஒப்பந்த பொறியாளர்கள் பிரவீன், கண்ணன். சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.பாக்கியம். பகுதிக்குழு உறுப்பினர் வெங்கட்டையா ஆகியோர் உடனிருந்தனர்.