தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் மத்திய சென்னை கிளை துணைத்தலைவர்கள் எம்.நடராஜன், ஜி.மணவாளன் ஆகியோரது பணி நிறைவு பாராட்டு விழா திங்களன்று (ஜூலை 17) சிந்தாதரிப்பேட்டையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் இவ்விருவரும் தலா 2 ஆயிரம் ரூபாயை நிர்மல் பள்ளி வளர்ச்சி நிதியாக வழங்கினர். இந்நிகழ்வில் அமைப்பின் மாநிலத் தலைவர் தி.ஜெய்சங்கர், துணைப் பொதுச்செயலாளர் ஆர்.ரவிக்குமார், கிளைத் தலைவர் வி.சீனிவாசன், செயலாளர் எஸ்.கண்ணன், பொருளாளர் எஸ்.முருகவேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.